ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் ஸ்டார்ட்அப்கள் உருவாக்கிய 'ஆயுஷ் உணவு' தயாரிப்புகள் 'உலக உணவு இந்தியா' நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படும்

Posted On: 02 NOV 2023 4:42PM by PIB Chennai

உலக உணவு இந்தியா 2023 நிகழ்ச்சியில் ஆயுஷின் புதுமையான ஆயுஷ் உணவு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படும். பிரகதி மைதானத்தில் உள்ள ஆயுஷ் அமைச்சக அரங்கில் நாடு முழுவதும் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வழங்கும். மொத்தம் 18 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 30-க்கும் மேற்பட்ட ஆயுஷ் தயாரிப்புகளைக் கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளன.

 

 

உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில்  ஆயுஷ் உணவு குறித்த சிறப்பு அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமர்வில் ஆயுஷ் உணவின் முக்கியத்துவம், ஆயுஷ் உணவின் ஆரோக்கிய நன்மைகள் போன்றவை விவாதிக்கப்படும்.

 

 

உலகெங்கிலும் உள்ள சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆயுர்வேதத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்தும் இந்த அமர்வில் விவாதிக்கப்படும். ஆயுஷ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள், யுனிகார்ன்களுடனான ஆலோசனைகள் மற்றும் ஆயுஷ் துறையில் நுழையும் புதிய ஸ்டார்ட் அப்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

 

 

ஆயுஷ் பொருட்களின் உலகளாவிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக உணவு இந்தியா நிகழ்ச்சியின் சிறப்பு அமர்வில் ஆயுஷ் பொருட்களுக்கான உலகளாவிய சந்தையை அடையாளம் காண்பது, மற்றும் இந்தியாவில் இருந்து ஆயுஷ் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் முறையை வலுப்படுத்துவது குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெறும்.

 

 

ஆயுஷ் அமைச்சகம், ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலை இந்த நிகழ்விற்கான ஒருங்கிணைப்பு முகமையாக நியமித்துள்ளது. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் , ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம், புனே தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், சி.சி.ஆர்..எஸ், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், ஆயுஷ் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், முதலீடு இந்தியா ஆகியவை உலக உணவு இந்தியா நிகழ்வில் பங்களிக்கின்றன.

**********

ANU/PKV/BS/KRS

 

(Release ID: 1974143)


(Release ID: 1974192) Visitor Counter : 118