அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நாடு தழுவிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்திற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அறிவியல் அமைப்புகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு

Posted On: 02 NOV 2023 2:01PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள அறிவியல் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு தழுவிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்திற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கிய பிறகு, இந்தியாவின் விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஒரு பெரிய பொது ஆர்வம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வேகம் தொடர வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் , புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து துறை அறிவியல் செயலர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இதில் உரையாற்றிய அவர், "இந்தப் பிரச்சாரம் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சி.எஸ்.ஐ.ஆர், இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ உள்ளிட்ட  அறிவியல் துறைகளின் முன்னோடி சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த அற்புதமான பயணத்தின் பங்களிப்பிற்கும் ஒரு பகுதியாக இருப்பதற்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும்" என்று அவர் கூறினார்.

ஜனவரி முதல் முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை 37 சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்கள்நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஒரு வாரம் ஒரு ஆய்வகம்' என்றமாணவர் இணைப்புத் திட்டத்தைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், பள்ளி மாணவர்களிடையே கண்டுபிடிப்பு திறனை வளர்க்க அழைப்பு விடுத்தார்.

புதுமையான கற்றல் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்காக மாற்றுவதற்கும், பிரதமர் நரேந்திர மோடியின் சுய சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கும் இது பங்களிக்கும் என்று அவர்நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் விருதுகளுக்கு போட்டியிடும் ஆர்வமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இன்ஸ்பயர் திட்டம் அறிவியல் மனப்பான்மையை உருவாக்க உதவுகிறது என்று அமைச்சர் கூறினார். இந்தியாவின் 75வதுசுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் 2021 நவம்பரில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதல் வழிகாட்டுதல் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பின் இணைப்பை காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1974077

----

ANU/PKV/BS/KV



(Release ID: 1974148) Visitor Counter : 103