தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 71 வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது

Posted On: 01 NOV 2023 5:17PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (ஈபிஎஃப்ஓ) 71 வது நிறுவன தினத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளர் திருமதி ஆர்த்தி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு பூபேந்தர் யாதவ் கடந்த சில ஆண்டுகளில் ஈபிஎஃப்ஓ வளர்ந்துள்ள விதம் குறித்து பாராட்டுத் தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் 27 ஆம் தேதி மாவட்ட அளவில் உள்ள ஒவ்வொரு ஈபிஎஃப்ஓ அலுவலகமும் நடத்தும் மக்கள் தொடர்புத் திட்டத்தையும் அவர் பாராட்டினார். ஈபிஎஃப்ஓ தொழில் நுட்பத்தை மேலும் அதிக அளவில் ஏற்று செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். ஈபிஎஃப்ஓ இந்த ஆண்டு 8.15 சதவீத வட்டியை வழங்குகிறது என்றும், ஏற்கனவே 24 கோடிக்கும் அதிகமான கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

சிறப்பாக செயல்பட்ட பல்வேறு ஈபிஎஃப்ஓ அலுவலகங்களுக்கு இந்த விழாவில் பவிஷ்ய நிதி விருதுகள் வழங்கப்பட்டன.

***  

AD/PLM/KRS



(Release ID: 1973908) Visitor Counter : 102