பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நாளை குழு விவாதம் நடத்துகிறது
Posted On:
01 NOV 2023 2:07PM by PIB Chennai
2023 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) "ஒழுங்கு நடவடிக்கைகள்" குறித்த குழு விவாதத்தை புதுதில்லியில் நாளை (02.11.2023) நடத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் கொண்டாடப்படும் வாரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை சிவிசி கடைப்பிடிக்கிறது. இந்த ஆண்டு, இந்த விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
"ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள்; தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள்” என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு இந்த வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாளை நடைபெறவுள்ள குழு விவாதத்தின் போது, துறைசார் நிபுணர்களின் விளக்கங்களுடன் ஒழுங்கு நடவடிக்கைகளின் நுணுக்கங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
Release ID: 1973721
ANU/AD/PLM/KRS
(Release ID: 1973890)
Visitor Counter : 218