பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தூய்மை இந்தியா சிறப்பு இயக்கத்தின் 3-ம் இயக்கத்தின் செயல்பாட்டுக் கட்டம் 2023 அக்டோபர் 31 வெற்றிகரமாக நிறைவடைந்தது - தூய்மையை நிறுவனமயமாக்குவதிலும் அரசுத் துறைகளில் நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைப்பதிலும் சிறப்பு இயக்கம் சிறந்த மைல்கற்களை எட்டியுள்ளது: மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 01 NOV 2023 12:26PM by PIB Chennai

2023 அக்டோபர் 31  அன்று தூய்மை இந்தியா சிறப்பு இயக்கம் 3.0 –வின் செயல்பாட்டுக் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாத மத்திய பணியாளர் நலன் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். சிறப்பு இயக்கம் 3.0 என்பது தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைப்பதற்கும் நடத்தப்பட்டது என்றும், இது பல சிறந்த மைல்கற்களை எட்டியுள்ளது என்றும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, தூய்மைப் பணிக்கான 'சிறப்பு இயக்கம் 3.0-ல் நாட்டில் உள்ள 2.53 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களில் பணிகள் நடைபெற்றன என்று அவர் தெரிவித்தார்.

2021-23 ஆம் ஆண்டு முதல் அரசால் நடத்தப்பட்ட சிறப்பு இயக்கங்களில், அலுவலக குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ.1100 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சிறப்பு இயக்கம் 3.0, 2023 அக்டோபர் 2-ம் தேதி முதல் 31 –ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் ரூ. 500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சிறப்பு இயக்கம் 3.0-த்தில் 2.53 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு, அலுவலக பயன்பாட்டிற்காக 154 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு இயக்கம் 3.0- அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் அரசுச் செயலாளர்கள் ஆய்வு செய்தனர். சிறப்பு பிரச்சாரம் 3.0-ன் முன்னேற்றம் தினசரி அடிப்படையில் ஒரு பிரத்யேக இணையதளமான https://scdpm.nic.in/ என்ற தளத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டது. 46,11,117 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பொதுமக்களின் 4,74,742 குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

-----

ANU/PKV/PLM/KPG



(Release ID: 1973759) Visitor Counter : 89


Read this release in: English , Urdu , Hindi , Telugu