மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் 3 நாள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 31 OCT 2023 4:29PM by PIB Chennai

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்  நவம்பர் 1ம் தேதி முதல் 3 நாட்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

 

தனது பயணத்தின் போது, பல முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள் மற்றும் வணிகத் தலைவர்களை சந்தித்து இரு நாடுகளின் கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் தொடர்பான முக்கியமான ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார்.

 

நவம்பர் 1 அன்று, ஆரம்பக் கல்வி இணையமைச்சரும் அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறையின் தலைவருமான திருமதி சாரா முஸல்லம், ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் மேதகு டாக்டர் அஹ்மத் அல் பலாசி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் எச்.எச்.ஷேக் அப்துல்லா பின் சயீத் ஆகியோரை சந்திக்கிறார்.

 

ஐஐடி டெல்லி-அபுதாபியின் இடைக்கால வளாகத்தை அமைச்சர் பார்வையிடுகிறார். 42 அபுதாபி, தனித்தன்மை வாய்ந்த கற்றல் பள்ளியை அவர் பார்வையிடுகிறார். இந்திய தூதரக அரங்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒடியா சமூகத்தினருடன் திரு பிரதான் கலந்துரையாடுகிறார்.

 

நவம்பர் 2 அன்று, திரு பிரதான் அபுதாபியில் உள்ள உலகளாவிய தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பான ஹப் 71 ஐ பார்வையிடுகிறார், அதைத் தொடர்ந்து பிஏபிஎஸ் மந்திருக்கு விஜயம் செய்கிறார். துபாயில், இ.எஃப்.எஸ் என்ற வசதி மேலாண்மை நிறுவனம் மற்றும் அவர்களின் பயிற்சி வசதிகளை அமைச்சர் பார்வையிடுகிறார்.

 

பின்னர், அமைச்சரவை விவகாரங்கள் அமைச்சர் மேதகு முகமது அப்துல்லா அல் கெர்காவியை சந்திக்கிறார். சி.பி.எஸ்.இ பள்ளிகளின் முதல்வர்களையும் அவர் சந்திக்கிறார். துபாயில் உள்ள ஐஐடி, ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் திரு பிரதான் கலந்துரையாடுகிறார்.

 

அடுத்த நாள், திரு பிரதான் துபாயில் டிபி வேர்ல்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மேதகு சுல்தான் அகமது பின் சுலைம் மற்றும் விஎஃப்எஸ் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.

 

**********  

AD/BS/KRS


(रिलीज़ आईडी: 1973555) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia , Telugu