பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்தார் கே.எம்.பணிக்கர் 'என்ஐபி' கட்டுரைப் போட்டி-பரிசளிப்பு விழா

प्रविष्टि तिथि: 28 OCT 2023 10:55AM by PIB Chennai

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் தனது அறையில் நடந்த எளிய பரிசளிப்பு விழாவில் கடற்படையின் அறிவுசார் அடையாள விளக்கு( 'என்ஐபி') என்ற விருதை கமாண்டர் எம்.அருண் சக்ரவர்த்திக்கு வழங்கினார். 

கடற்படையில்  பணி புரிபவர் இடையே ் வாசிப்பு, எழுதுதல் மற்றும் சிந்திக்கும் திறன்களை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய கடற்படையின் சர்தார் கே.எம்.பணிக்கர் 'என்.ஐ.பி' கட்டுரைப் போட்டியில் சி.டி.ஆர் எம்.அருண் சக்ரவர்த்தி வெற்றி பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை பணியாளர் தலைவர் எம்.கே.சுவாமிநாதன் மற்றும் கமடோர் (கடற்படைக் கல்வி)  ஜி ராம்பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடல்கள் மற்றும் கடல்சார் விவகாரங்களின் முக்கியத்துவம் தொடர்பாக  இந்தியாவில் கடல்சார் விழிப்புணர்வை ஏற்படுத்திய கடல்சார் உத்தி சிந்தனையாளரான சர்தார் கே.எம்.பணிக்கர் நினைவாக இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.        

***

ANU/PKV/BS/DL


(रिलीज़ आईडी: 1972489) आगंतुक पटल : 123
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu