மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி & எழுத்தறிவுத் துறையில் முழு வீச்சில் சிறப்பு இயக்கம் 3.0 கடைபிடிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2023 6:27PM by PIB Chennai

கல்வி அமைச்சகம் முழு உறுதியுடனும் ஆற்றலுடனும் 3.0 சிறப்பு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மற்றும் அதன் தன்னாட்சி அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளின் உதவியுடன் சுமார் 8 லட்சம் பள்ளி மாணவர்கள் மற்றும் 43,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பங்கேற்பின் மூலம் இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன.

வரும் 31ஆம் தேதி வரை 30,934 தூய்மை இயக்கங்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த இயக்கத்தின் போது, பொதுமக்களின் குறைகள், பொதுமக்கள் குறைகேட்பு மனுக்கள் மீதான மேல்முறையீடுகள் ஆகியவற்றினை நிவர்த்தி செய்தல், பொதுமக்களின் குறைகளை பதிவு செய்தல் மற்றும் அகற்றுதல் மற்றும் தீர்வு காணுதல் போன்றவற்றில் 38,998 கோப்புகளை பரிசீலனை செய்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

3 வது வாரத்தில் 25,715 தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 747  மக்கள் குறைகளுக்கு தீர்வு,    பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்களுக்கு 100 சதவீதம் தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.

***

ANU/AD/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1969830) வருகையாளர் எண்ணிக்கை : 151
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी