குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

துர்கா பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 21 OCT 2023 6:11PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர்  திரு ஜகதீப் தன்கர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;

“அனைவருக்கும் எனது இதயம் கனிந்த துர்கா பூஜை திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, அன்னை துர்க்கையின் அசைக்க முடியாத உணர்வையும், தீமைக்கு எதிரான நன்மையின் நித்திய வெற்றியையும் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த புனித நிகழ்வின் துடிப்பான கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார செழுமையில் நாம் நம்மை மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது, துன்பங்களை அசைக்க முடியாத உறுதியுடன் எதிர்கொள்ளவும், அறத்தின் பாதையில் ஒற்றுமையாக நிற்கவும் தேவி அன்னையிடமிருந்து உத்வேகம் பெறுவோம்.

அன்னை துர்க்கை நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை வழங்கட்டும்.”

***

ANU/AD/BS/DL


(रिलीज़ आईडी: 1969822) आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi