அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பொருட்களின் ஆப்டோ-மின்னணு பண்புகளை ஆராய பல்கலைக்கழகங்களுக்கான ஆய்வு நிலையங்கள் உருவாக்கம்

Posted On: 21 OCT 2023 1:04PM by PIB Chennai

குஜராத்தில் உள்ள ஒரு புதிய மேம்பட்ட தொகுப்பு மற்றும் குணாதிசய ஆய்வகம் (எல்ஏஎஸ்சி), செமிகண்டக்டர்கள், மெல்லிய பிலிம்கள், எல்இடிகள் மற்றும் சோலார் செல்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான பொருட்களில் ஆப்டோ-எலக்ட்ரானிக் பண்புகளை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான எல்ஏஎஸ்சி ஆய்வு நிலையங்களை உருவாக்கி வருகிறது.

ஆய்வு நிலையத்தின் திறன்களைக் கொண்டு, வெப்பநிலை மற்றும் அலைநீளம் மாறுபடும் போது ஆராய்ச்சியாளர்கள் இந்த பொருட்களின் ஆப்டோ-எலக்ட்ரானிக் பண்புகளை ஆய்வு செய்யலாம். இந்த விரிவான அணுகுமுறை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பொருட்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறவும், அவற்றின் பண்புகளை மிகவும் திறம்பட மேம்படுத்தவும் அனுமதிக்கிறது.

பண்டிட் தீனதயாள் எரிசக்தி  பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்பு மையத்தில் உள்ள எல்.ஏ.எஸ்.சி பல்வேறு களங்களுக்கு சேவை செய்கிறது, இது அடிப்படை மற்றும் மேம்பட்ட தானியங்கி ஆய்வு நிலையங்களை உருவாக்குவதை உள்ளடக்கியது. இத்தகைய ஆய்வு நிலையங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவது, இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு குறைந்த செலவில் அதிக வடிவமைப்பு நெகிழ்வுத்தன்மையை வழங்க முடியும்,

இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகளுடன் முன்பு சாத்தியமில்லாத வசதிகளை இதனால் அவர்கள்  தேவைக்கேற்ப தங்கள் சோதனை அமைப்புகளில் மாற்றங்களைச் செய்ய முடியும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சட்டரீதியான அமைப்பான அறிவியல் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் ஆதரவுடன் முன்னெடுப்பு மையத்தில் பிரத்யேக ஃபேப்ரிகேஷன் வசதி, ஒரு திறமையான வடிவமைப்பு மற்றும் நிரலாக்கக் குழுவின் நிதியுதவியுடன் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களுக்கும், ஐரோப்பாவில் இரண்டு மற்றும் மத்திய கிழக்கில் பலவற்றிற்கும் வெற்றிகரமாக அமைப்புகளை வழங்கியுள்ளது.

***

ANU/PKV/BS/DL


(Release ID: 1969681) Visitor Counter : 94


Read this release in: English , Urdu , Hindi , Marathi