பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 3.0-ன் செயலாக்கக் கட்டத்தின் மூன்றாவது வாரத்தில் பாதுகாப்புத் துறை

Posted On: 19 OCT 2023 4:48PM by PIB Chennai

தூய்மை சிறப்பு இயக்கம் 3.0-ன் செயலாக்கக் கட்டத்தின் மூன்றாவது வாரத்தில் (02-31 அக்டோபர், 2023) பாதுகாப்புத் துறை ஈடுபட்டு வருகிறது. சிறப்பு இயக்கம் 3.0 இன் ஆயத்த கட்டத்தில், மக்களை மையமாகக் கொண்ட தூய்மை இயக்கத்தை மேற்கொள்ள நாடு முழுவதும் மொத்தம் 3066 இடங்களை பாதுகாப்புத் துறை அடையாளம் கண்டது நினைவிருக்கலாம். பாதுகாப்புக் கணக்குகள் கட்டுப்பாட்டாளர், எல்லைச் சாலைகள் அமைப்பு, ராணுவ மருத்துவமனைகள், தேசிய மாணவர் படை இயக்குநரகம், இந்திய கடலோரக் காவல்படை, ராணுவப் பள்ளிகள், உணவகத்துறை மற்றும் கண்டோன்மென்ட்கள் போன்ற பல்வேறு அமைப்புகளுக்குச் சொந்தமான 1,832 இடங்கள் 18.10.23 அன்று    ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்தன.

18.10.2023 வரை மொத்தம் 28,859 கோப்புகள் பரிசீலனை செய்யப்பட்டு, 16,485 கோப்புகளை அகற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.  18.10.23 அன்று மொத்தம் 92,850 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, காலாவதியான வாகனங்களை ஏலம் விட்டதன் மூலம் ரூ.55.43 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.  

டேராடூன் கண்டோன்மென்ட் வாரியம் டேராடூன் கண்டோன்மென்ட் பகுதியில் பாலித்தீன் கழிவுகளை அகற்றுவதற்காக "பாலித்தீன் கழிவு சேகரிப்பு வங்கி" என்ற வங்கியைத் தொடங்கியுள்ளது. பாலித்தீன் கழிவுகளான சிப்ஸ் உறை, பாலித்தீன் உறைகள், பாலிதீன் சாக்குகள் போன்றவை கிலோ ரூ.3-க்கு பொதுமக்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கன்டோன்மென்ட் பகுதியில் மூன்று இடங்களில் பாலித்தீன் கழிவு சேகரிப்பு வங்கிகளுக்கான மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சேகரிக்கப்படும் பாலித்தீன் கழிவுகள் உயர் அடர்த்தி கொண்ட கலப்பு பாலிமர் டைல்ஸ், போர்டுகள் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கண்டோன்மென்ட் வாரியம் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 70 டன் முதல் அதிகபட்சம் 100 டன் வரை பாலித்தீன் கழிவுகளை கொள்முதல் செய்கிறது.

மக்கள் தங்கள் வீட்டில் பாலித்தீன் கழிவுகளை சேமித்து வைத்து, பாலித்தீன் கழிவுகளை விற்பனை செய்வதற்காக மாதத்தின் எந்த நாளிலும் அருகிலுள்ள "பாலித்தீன் கழிவு சேகரிப்பு வங்கி"க்கு செல்லலாம். இது  தவிர பாலித்தீன் கழிவுகளை வீட்டிலிருந்து குப்பை சேகரிக்கும் நபருக்கும் கொடுக்கலாம்.

******

(Release ID: 1969101)  

ANU/PKV/IR/KPG/KRS


(Release ID: 1969193) Visitor Counter : 95


Read this release in: English , Urdu , Hindi , Telugu