விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் சிறப்பு இயக்கம் 3.0

Posted On: 19 OCT 2023 11:40AM by PIB Chennai

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையும், அதன் துணை நிறுவனங்களான இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்டவையும், வேளாண் அறிவியல் மையங்களும் அவற்றின் பிராந்திய அலுவலகங்கள், வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம், மூன்று மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கல்லூரிகள் மத்திய அரசின் 3.0 சிறப்பு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளன.

3.0 சிறப்பு இயக்கத்தின் போது ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்ட 19,843 நேரடிக் கோப்புகள் மற்றும் 4717 மின் கோப்புகளில், 11,062 நேரடிக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 5,470 நேரடிக் கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை 2,618 மின்னணு கோப்புகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், 2023 அக்டோபர் 02 முதல் 31 வரை 3,326 எண்ணிக்கையில் "தூய்மை குறித்த சிறப்பு இயக்கத்திற்கு" இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,884 'தூய்மை இயக்கங்கள்' நடத்தப்பட்டுள்ளன. சுமார் 87,475 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. பயனற்றப் பொருட்கள் விற்பனை மூலம் ரூ.10,86,731/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இத்துறை நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்காக இந்த இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் முன்னேற்றம் துறையின் உயர் நிலையில் வழக்கமான ஆய்வுக் கூட்டங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கம் 2023 அக்டோபர் 31 வரை தொடரும்.

***   

ANU/PKV/SMB/RS/KV


(Release ID: 1969026) Visitor Counter : 105