விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 18 OCT 2023 4:43PM by PIB Chennai

மனித சமுதாயத்தின் பரந்த நன்மைக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்புகளை இந்தியா ஆதரிக்கிறது. விண்வெளி அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது, மோதல்கள் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய உறுதிப்பாடு என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

 

புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் சமகால சீன ஆய்வுகளுக்கான மையம் ஏற்பாடு செய்திருந்த 'விண்வெளி - உலகளாவிய தலைமைக்கான தேடலில் சீனாவின் இறுதி எல்லை' என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றினார்.

 

"வெளிப்படைத் தன்மை, பொறுப்புடமை மற்றும் விண்வெளியின் அமைதியான பயன்பாடு ஆகிய கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார். சீனா உள்பட அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுடன் வெளிப்படையான உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று நாம் வலியுறுத்துவதாகக் கூறினார். இதனால் நாம் ஒருவருக்கொருவர் நோக்கங்கள், முயற்சிகளை ரகசியமாகவோ அல்லது சந்தேகமாகவோ இல்லாமல் பகிர்ந்து கொள்வதாகவும், மேலும் பாதுகாப்பான, நீடித்த சூழலைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.

 

இந்தியாவின் விண்வெளித் திட்டம் உலகளவில் போட்டியிடுவது மட்டுமல்லாமல் சிறந்து விளங்குகிறது என்பதை சுட்டிக் காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் விண்வெளித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும், சாதாரண குடிமக்களுக்கு 'வாழ்க்கையை எளிதாக்க' உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்களுடன் இஸ்ரோ ஒத்துழைக்கிறது என்றும்  கூறினார்.

 

அமெரிக்காவும் அப்போதைய சோவியத் ஒன்றியமும் 1969 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு மனிதனை தரையிறக்குவதற்கு முன்பே தங்கள் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை உலகிற்கு அளித்தது நமது நாட்டின் சந்திரயான்தான்" என்று அவர் கூறினார்.

 

இந்தியாவின் விண்வெளிப் பயணங்கள் மனித வளங்கள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

தோல்வியடைந்த ரஷ்யாவின் நிலவு திட்டத்திற்கு ரூ.16,000 கோடியும், சந்திரயான்-3 திட்டத்துக்கு ரூ.600 கோடியும் செலவானதாக அவர் தெரிவித்தார்.

 

ஸ்வாமித்வா, பிரதமர் விரைவு சக்தி, ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் நவீன நகரங்கள், வேளாண்மை, நீர்வள வரைபடம், தொலை மருத்துவம் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு துறைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளைப் பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த அணுகுமுறை சாமானிய மக்களுக்கு 'வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது' என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

------------

ANU/AD/IR/RS/KRS


(Release ID: 1968781)


(Release ID: 1968912) Visitor Counter : 118