நிதி அமைச்சகம்

சிறப்பு இயக்கம் 3.0-ன் முதல் பதினைந்து நாட்களில் குப்பைகளை அகற்றுதல், இட மேலாண்மை, தளங்களின் தூய்மை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளங்கள் அமைத்தல் ஆகியவற்றிற்கு நிதிச்சேவைகள் துறை (டி.எஃப்.எஸ்) முன்னுரிமை அளிக்கிறது

Posted On: 18 OCT 2023 12:38PM by PIB Chennai

நிதிச் சேவைகள் துறை, நிதி அமைச்சகம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண சிறப்பு இயக்கம்  3.0-ன் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குப்பைகளை அகற்றுதல், இட மேலாண்மை, இடங்களைத் தூய்மை செய்தல்மாற்றுத்திறனாளிகளுக்கு  சாய்வுதளங்கள் அமைத்தல் ஆகியவை இயக்க கால முதல் பாதியின் சிறப்பம்சங்களாகும்.

சுமார் 1.8 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.100 லட்சத்துக்கும் அதிகமான கழிவுகள் அகற்றப்பட்டு, 3,400-க்கும் மேற்பட்ட இடங்கள் தூய்மை செய்யப்பட்டுள்ளன.

5,998 குறைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் பொதுமக்களின் குறைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்கு தீர்வு காண நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 50 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

 

***

ANU/PKV/SMB/AG/KPG



(Release ID: 1968782) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi , Punjabi