மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையாக ரூ.1968.87 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 OCT 2023 3:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022-23 ஆம் நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையை தண்டவாளப் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சகப் பணியாளர்கள் மற்றும் பிற குழு 'சி' பிரிவு ஊழியர்களுக்கு (ஆர்.பி.எஃப்/ ஆர்.பி.எஸ்.எஃப் பணியாளர்கள் நீங்கலாக) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரயில்வே ஊழியர்களின் இந்தச் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் 11,07,346 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1968.87 கோடியை உற்பத்தியுடன் இணைந்த  ஊக்கத்தொகையாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-2023-ம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. ரயில்வே 1509 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றது. சுமார் 6.5 பில்லியன் பயணிகளை அது ஏற்றிச் சென்றது. ரயில்வே ஊழியர்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் விதமாக உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை இருக்கும்.

********

ANU/PKV/IR/RS/KPG

 


(Release ID: 1968767) Visitor Counter : 299