பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் தூய்மை இயக்கம் 3.0
प्रविष्टि तिथि:
17 OCT 2023 2:26PM by PIB Chennai
தூய்மை என்பது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும். இது பணியிடங்களுக்கும் அவசியமாகிறது. தூய்மை இயக்கம் 3.0 நாடு முழுவதும் தூய்மையை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்துள்ளது. பாதுகாப்புத் துறையில் உள்ள பொதுத் துறை உற்பத்தி நிறுவனங்கள், முழு ஆர்வத்துடனும் சிறந்த அணுகுமுறையுடனும் இதில் பங்கேற்கின்றன.
இந்த இயக்கம் 2023 அக்டோபர் 2 முதல் 2023 அக்டோபர் 31 வரை நீடிக்கும். இயக்கத்தின் போது, அலுவலகங்களில் பணியிடங்களின் பரப்பளவை ஆய்வு செய்வது, தூய்மை தொடர்பான பணிகளில் சிறப்பு கவனம் செலுத்துவது ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த இயக்கத்தின் 2 வது வாரத்தின் முடிவில், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை பின்வரும் சிறப்பம்சங்களை எட்டியுள்ளது:
- 18,000 கோப்புகள், பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன
- குப்பை மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்தியதன் மூலம் 7 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது
- 1,300 மெட்ரிக் டன், தேவையற்ற கழிவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன
- குப்பைகள் அகற்றப்பட்டு தேவையற்ற பழையப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ.19 கோடி வருவாய் ஈட்டப்பட்டது
- பொதுமக்களின் 63 குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
- டி.டி.பி. அலுவலகங்கள் மற்றும் டி.பி.எஸ்.யூக்களின் பங்கேற்புடன் இணைய வழி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தினசரி முன்னேற்றங்கள் இணைச் செயலாளர் நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்தின் போது செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் தனியான அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், பதாகைகள், சுவரொட்டிகள், ஓவியப் போட்டிகள் போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்துப் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் இணைப்பு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்கள் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
*****
SMB/ANU/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1968458)
आगंतुक पटल : 141