பாதுகாப்பு அமைச்சகம்
கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் வைரவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அதன் வளாகத்திற்குள் நடந்த முதலாவது மாரத்தான் போட்டியில் 13,500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்
Posted On:
16 OCT 2023 12:08PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2023 அக்டோபர் 15, அன்று அதன் வளாகத்திற்குள் முதலாவது மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற 'என்டிஏ மாரத்தான்' போட்டியில் நாடு முழுவதும் இருந்து பங்கேற்ற 13,500 க்கும் அதிகமானோருக்கு இது மனஉறுதி மற்றும் சகிப்புத்தன்மையை ஏற்படுத்தியது. மேலும் அவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இந்நிறுவனத்தின் உயர்தர பயிற்சி வசதிகள் மற்றும் பாரம்பரியம் குறித்த பிரத்யேக அம்சத்தை வழங்கியது.
இந்த மாரத்தானில் 42 கிலோமீட்டர் முழு மாரத்தான், 21 கிலோமீட்டர் அரை மாரத்தான் மற்றும் 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர் மற்றும் 3 கிலோமீட்டர் ஓட்டங்கள் உட்பட பலப் போட்டிப்பிரிவுகள் இருந்தன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள கடக்வாஸ்லாவில் சஹ்யாத்ரி மலைத்தொடர்களின் அடிவாரத்தில் தேசியப் பாதுகாப்பு நிறுவனம் 7,015 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அத்துடன் அழகிய மலைகள் மற்றும் ஒரு பெரிய ஏரியால் சூழப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு நிறுவன வளாகத்திற்குள் ஓடும் பாதை 21 கிலோமீட்டர் தொலைவாகும். அங்கு இயற்கை அழகின் வழியாக ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடினர்.
42 கிலோ மீட்டர் ஆடவர் பிரிவில் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டோரில் நிஷூ குமாரும், 36 வயது முதல் 45 வயதிற்குட்பட்டோரில் கிருஷ்ணா சிரோதியாவும் முதலிடம் பெற்றனர்.
42 கிலோ மீட்டர் மகளிர் பிரிவில் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டோரில் லெப்டினென்ட் கமாண்டர் அஞ்சனி பாண்டேயும், 36 வயது முதல் 45 வயதிற்குட்பட்டோரில் அஷ்வினி கோகுல் தியோரேயும் முதலிடம் பெற்றனர்.
இந்த மாரத்தான் போட்டியில் 5 வயது சிறுவர் முதல் 96 வயது பெரியவர் வரை பங்கேற்றனர்.
தேசியப் பாதுகாப்பு நிறுவனம் 2024 ஜனவரி 16 அன்று அதன் 75-வது ஆண்டினை நிறைவு செய்யும். இதையொட்டி 2023 ஜனவரி 16 தொடங்கி ஓராண்டு காலத்திற்குப் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***
ANU/SMB/IR/AG/KPG
(Release ID: 1968048)
Visitor Counter : 116