சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புதிய வசதிகளை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
Posted On:
14 OCT 2023 6:48PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வடகிழக்கில் புதிய பிராந்திய புற்றுநோய் மையம், புதிய இளநிலை மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரியின் புதிய கட்டிடம், விடுதிகள், 8 மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், மெய்நிகர் பிரேதப் பரிசோதனை முறை மற்றும் புதிய விருந்தினர் மாளிகை ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 150 படுக்கைகள் கொண்ட கிரிட்டிகல் கேர் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடக்க விழாவில் டாக்டர் மாண்டவியா பேசுகையில், வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புதிய வசதிகள் வடகிழக்கு பிராந்திய மக்களுக்கு மிகவும் தேவையான சுகாதார சேவைகளை வழங்கும். வடகிழக்குப் பிராந்தியத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், அப்பகுதி மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது,” என்று கூறினார்.
மத்திய அரசு சுகாதாரத் துறையை ஒரு முழுமையான அணுகுமுறை மூலம் பார்க்கிறது என்று டாக்டர் மாண்டவியா கூறினார். "நாங்கள் புதிய மற்றும் மேம்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பை மட்டும் உருவாக்கவில்லை. டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறோம். கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,70,000 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிரிட்டிகல் கேர் பிரிவை உருவாக்கி வருகிறோம்”, என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1967732
***
ANU/AD/BS/DL
(Release ID: 1967757)
Visitor Counter : 95