குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஒன்பதாவது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை (பி20) முன்னிட்டு சபாநாயகர்கள் மற்றும் தூதுக்குழுக்களின் தலைவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் மதிய விருந்து அளித்தார்

प्रविष्टि तिथि: 14 OCT 2023 6:07PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள யசோபூமியில் இன்று நடைபெற்ற ஒன்பதாவது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டை (பி20) முன்னிட்டு பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய குடியரசுத் துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கர் மதிய விருந்து அளித்தார்.

புதுதில்லியில் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்துடன் (ஐபியு) இணைந்து  12ம் தேதி முதல் 14ம் தேதி  வரை இந்திய நாடாளுமன்றம் ஏற்பாடு செய்த 9வது பி20 உச்சிமாநாடு மற்றும் நாடாளுமன்ற மன்றத்தில் பங்கேற்ற ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மதிய விருந்தில் கலந்து கொண்டனர்.

யசோபூமியில் அவரைச் சந்தித்த நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் தலைவர் மேதகு திரு. டுவார்டே பச்சேகோவுடனும் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடினார். நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் சமகாலத்துடன் தொடர்புடைய பரந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதில் ஐ.பி.யுவின் பங்கு குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. 

நாடாளுமன்ற மன்றம் மற்றும் பி 20 உச்சிமாநாட்டின் போது தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் துணை ஜனாதிபதி வரவேற்றார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1967719

***

ANU/AD/BS/DL


(रिलीज़ आईडी: 1967741) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी