சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 12-ம் தேதி உலகப் பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

Posted On: 11 OCT 2023 1:19PM by PIB Chennai

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலகப் பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, இது பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு குறித்து கவனத்தை ஈர்ப்பதற்கான உலகளாவிய நிகழ்வாகும். இந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வருகிறது. பணியின் போது உங்கள் கண்களை நேசியுங்கள் என்பது இந்த ஆண்டின் கருப்பொருள். இந்த உலகப் பார்வை தினத்தில், பணியிடத்தில் தங்கள் பார்வையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதிலும், எல்லா இடங்களிலும் தொழிலாளர்களின் கண் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதிலும்  கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை (டி.இ.பி.டபிள்யூ.டி) நாட்டின் மாற்றுத் திறனாளிகளின் அனைத்து வளர்ச்சி பற்றிய அம்சங்களை கவனிக்கும் ஒருங்கிணைப்புத் துறையாகும். மக்களிடையே பார்வைக் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இத்துறை அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம்   அக்டோபர் 12 அன்று உலகப் பார்வை தினத்தை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளாக நடத்தி வருகிறது.

---- 


ANU/SMB/PKV/KPG


(Release ID: 1966636) Visitor Counter : 288
Read this release in: Urdu , English , Hindi , Telugu