பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ட்ரீ தகவல் பலகையில் பொது மக்கள் குறை தீர்ப்பு இணையதளம் மற்றும் தானியங்கி பகுப்பாய்வுக்கான நுண்ணறிவு குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பு 2.0-ஐ டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
11 OCT 2023 10:19AM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையில் "டிஜிட்டல் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை" என்ற கருப்பொருளின் கீழ் சிறப்பு இயக்கம் 3.0-ஐ பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2023, செப்டம்பர் 29 அன்று தொடங்கி வைத்தார். நாடு தழுவிய ஒருங்கிணைந்த சேவை வழங்கல், இணைய தளங்களை ஊக்குவித்தல், பொதுமக்களின் குறைகளைக் குறைத்தல், பொதுமக்களின் குறைகளைத் திறம்பட நிவர்த்தி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு / வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், நீடித்த நடைமுறைகளை ஊக்குவித்தல், அலுவலகத்தில் தூய்மை மற்றும் திறமையான பதிவு மேலாண்மையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை இத்துறை மேற்கொண்டது.
ஒருங்கிணைந்த சேவை இணையதளங்கள்: மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சேவை பெறும் உரிமை ஆணையர்கள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் 27 உயர் அதிகாரிகளுடன் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை ஒரு கூட்டத்தைக் நடத்தியது. இதில் முகமற்ற, தாமாக முன்வந்து விநியோகம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை வழங்கல் இணைய தளங்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் துறை வாரியான இ-சேவைகள் மற்றும் நேரடி சேவைகளை ஆன்லைன் தளங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 14,736 இ-சேவைகளை வழங்குகின்றன. ஜம்மு காஷ்மீர் அதிகபட்சமாக 1028 இ-சேவைகளை வழங்குகிறது. 2,016 கட்டாய இ-சேவைகளில் 1,505 சேவைகள் கிடைக்கின்றன, இது 74.6% ஆகும்.
பொதுமக்களின் குறைகளைக் குறைத்தல்: சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் பொதுமக்களின் குறைகளை உரிய நேரத்தில் நிவர்த்தி செய்வது மற்றும் தரமான முறையில் நிவர்த்தி செய்வது குறித்து அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2023 செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட சி.பி.ஜி.ஆர்.எம்.எஸ் குறித்த 17 வது மாதாந்திர அறிக்கையை டி.ஏ.ஆர்.பி.ஜி வெளியிட்டது. செப்டம்பர், 2023 இல், அனைத்து அமைச்சகங்கள் / துறைகளில் சராசரி குறைதீர்ப்பு நேரம் 19 நாட்கள் ஆகும்.
பயனுள்ள வகையில் குறை தீர்க்க செயற்கை நுண்ணறிவு / வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்: பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ட்ரீ தகவல் பலகையில் பொது மக்கள் குறை தீர்ப்பு இணையதளம் மற்றும் தானியங்கி பகுப்பாய்வுக்கான நுண்ணறிவு குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பு 2.0-ஐ தொடங்கி வைத்தார்.
***
SMB/ANU/IR/RS/KPG
(Release ID: 1966630)
Visitor Counter : 132