தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்
இந்தியாவின் முக்கியமான துறையின் சைபர் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக அரசு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறைகளுக்கான தேசிய சைபர் பாதுகாப்புப் பயிற்சியின் 2 வது பகுதி 'பாரத் என்சிஎக்ஸ் 2023'ஐ தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
Posted On:
10 OCT 2023 12:10PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு அஜய் குமார் சூட், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ராஜீந்தர் கன்னா தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் எம்.யு.நாயர் ஆகியோருடன் இணைந்து 'பாரத் என்.சி.எக்ஸ் 2023' -ஐ இன்று தொடங்கி வைத்தார். அக்டோபர் 9-ல் தொடங்கிய தேசிய சைபர் பாதுகாப்புப் பயிற்சி 2023' -ன் 2-வது நிகழ்வு அக்டோபர் 20 வரை நடைபெறும். இது சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் சம்பவங்களைக் கையாள்வது மற்றும் எதிர்கொள்வது குறித்து அரசு/ முக்கிய துறை நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் உயர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும்.
மத்திய அரசின் தேசியப் பாதுகாப்பு குழும செயலகம் தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துடன் உத்தி சார்ந்த கூட்டாண்மையுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்த முதன்மைப் பயிற்சி 300-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு ஒருங்கிணைக்கும் தளமாக செயல்படுகிறது. பல்வேறு வகையான அரசு நிறுவனங்கள், பொது அமைப்புகள் மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அனைவரும் பயிற்சி அமர்வுகள், நேரடி தீயணைப்பு மற்றும் உத்தி சார்ந்த பயிற்சிகள் மூலம் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர்.
பாரத் என்.சி.எக்ஸ் இந்தியா, உத்தி சார்ந்த தலைவர்களுக்கு சைபர் அச்சுறுத்தல்களை நன்கு புரிந்து கொள்ளவும், தயார்நிலையை மதிப்பிடவும், சைபர் நெருக்கடி மேலாண்மை மற்றும் ஒத்துழைப்புக்கான திறன்களை வளர்க்கவும் உதவும். இது சைபர் பாதுகாப்பு திறன்கள், குழுப்பணி, திட்டமிடல், தகவல்தொடர்பு, விமர்சன சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன்களை வளர்க்கவும் சோதிக்கவும் உதவும்.
இந்நிகழ்ச்சியின் போது, தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இயக்குநர் கர்னல் நிதிஷ் பட்நாகர், சைபர் பாதுகாப்பில் மத்திய அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டினார். இந்தியாவின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதில் இத்தகைய முன்முயற்சிகளின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக விரிவான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விரிவாக்கப்பட்ட அச்சுறுத்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட ஒரு சகாப்தத்தில் மற்றும் சைபர் பாதுகாப்பில் தொழிலாளர் மேம்பாட்டை நோக்கிய ஒரு படியாகும்.
***
SMB/ANU/IR/RS/KV
(Release ID: 1966271)
Visitor Counter : 143