சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
உலக டிஸ்லெக்ஸியா தினம் கடைப்பிடிக்கப்பட்டது
Posted On:
09 OCT 2023 2:32PM by PIB Chennai
உலக டிஸ்லெக்ஸியா தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. டிஸ்லெக்ஸியா என்பது பொதுவான கற்றல் கோளாறு ஆகும், இது ஒருவர் சரியாக படிக்கவும், எழுதவுதற்குமான திறனை பாதிக்கிறது. டிஸ்லெக்ஸியா உள்ளவர்கள் பெரும்பாலும் விரைவாகப் படிக்கவும், பிழைகள் இல்லாமல் எழுதவும் முடியாது. டிஸ்லெக்ஸியா உள்ளவர்கள் வாசிப்பு, எழுதுதல் ஆகியவற்றில் சிரமப்பட்டு அதனை எதிர்கொள்ள கை-கண் ஒருங்கிணைப்பு தேவைப்படும். உலக டிஸ்லெக்ஸியா தினம், இத்தகைய குறைபாடுகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. டிஸ்லெக்ஸியா உள்ள நபர்கள் தங்கள் கற்றல் முயற்சிகளில் உள்வாங்குதல், கல்விக்கான அணுகல், பயனுள்ள உத்திகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நாட்டின் மாற்றுத் திறனாளிகளின் அனைத்து மேம்பாட்டுப் பணிகளையும் கவனிக்கும் ஒருங்கிணைப்புத் துறையாகும். மக்களிடையே டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இத்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் உலக டிஸ்லெக்ஸியா தினத்தைக் கடைப்பிடித்து, இணையதள கருத்தரங்கில், உடற்கல்வி கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி, மூன்று நாள் பயிலரங்கம், சுவரொட்டி, வினாடி வினா போட்டி ஆகியவற்றை நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தியது.
***
ANU/SMB/IR/AG/KPG
(Release ID: 1965977)
Visitor Counter : 86