சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு & காஷ்மீரில் ரூ. 82 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு; மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி

Posted On: 08 OCT 2023 1:03PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி வெளியிட்டுள்ள  பதிவில், ஜம்மு-காஷ்மீரில் ரூ .82 கோடி மதிப்பீட்டில் இரு வழி 395 மீட்டர் மரோகே சுரங்கப்பாதையுடன் இணைந்து 250 மீட்டர் இருவழி  வழித்தட   கட்டுமானம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த உள்கட்டமைப்பு தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் ராம்பன் முதல் பனிஹால் பிரிவில் அமைந்துள்ளது என்று திரு கட்கரி கூறியுள்ளார். பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த 645 மீட்டர் பிரிவு, பயண தூரத்தை 200 மீட்டர் குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீருக்கு அருமையான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வழங்கப்படுவதாகவும், இது இந்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், ஒரு முதன்மை சுற்றுலாத் தலமாக அதன் ஈர்ப்பை அதிகரிக்கிறது என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

***

ANU/PKV/BS/DL


(Release ID: 1965732) Visitor Counter : 130