பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இத்தாலி மற்றும் பிரான்ஸ் பயணம்

प्रविष्टि तिथि: 08 OCT 2023 11:06AM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அக்டோபர் 09 முதல் 12, 2023 வரை இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இரு நாடுகளின் பயணத்தின் முதல் கட்டமாக, ரோம் நகரில் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் திரு குய்டோ க்ரிசெட்டோவை சந்திக்க உள்ளார். இரண்டாவது மற்றும் இறுதி கட்டத்தின் போது, திரு ராஜ்நாத் சிங் தனது சகாவான பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் திரு செபாஸ்டியன் லெகார்னுவுடன் 5 ஆவது வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். .

ரோம் மற்றும் பாரிஸ் ஆகிய இரு நகரங்களிலும் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பரஸ்பர ஒத்துழைப்பிற்கான சாத்தியமான வாய்ப்புகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொள்கிறார்.

***

ANU/PKV/RB/DL


(रिलीज़ आईडी: 1965721) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu