சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரமளித்தலை நோக்கி மிகப்பெரிய உந்துதல்: மத்திய பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பிராந்திய மையத்துக்கு அடிக்கல்

Posted On: 06 OCT 2023 3:41PM by PIB Chennai

ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு பெரிய உந்துதலைக் குறிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில், மத்தியப் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தின் (சிஆர்சி) -சத்தர்பூரின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த விழாவில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் மற்றொரு முன்னோடி முயற்சியாகும் என்று கூறினார். திறன் மேம்பாடு, புனர்வாழ்வு சேவைகள் மற்றும் உள்ளடக்கிய சமூக திட்டங்கள் மூலம் ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட கட்டுமானக் கழகத்தில் (என்.பி.சி.சி) கட்டுமானத்தின் கீழ் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும். தேசிய கட்டிட கட்டுமானக் கழகத்தின் (என்.பி.சி.சி) அர்ப்பணிப்பு முயற்சிகள் காரணமாக சி.ஆர்.சி-சத்தர்பூருக்கான புதிய கட்டிடம் புத்தம் புதிய, அதிநவீன கட்டமைப்பைப் பெற தயாராக உள்ளது. 41,275 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கட்டிடம், மாற்றுத் திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தடையற்ற சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மத்திய பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தின் -சத்தர்பூரின் புதிய கட்டிடம் போபால், நாக்பூர் மற்றும் அகமதாபாத்தில் தற்போதுள்ள சி.ஆர்.சி.க்களைப் போல மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.

***

(Release ID: 1965006)

ANU/PKV/BS/AG/KRS



(Release ID: 1965048) Visitor Counter : 120