பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் 2023, அக்டோபர் 07 அன்று ஆதிப் பெருவிழாவைத் திரு அர்ஜுன் முண்டா தொடங்கி வைக்கிறார்

Posted On: 06 OCT 2023 12:54PM by PIB Chennai

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் அக்டோபர் 7 அன்று தேசிய பழங்குடியினர் திருவிழாவான ஆதிப் பெருவிழாவை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைப்பார். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை நினைவுகூரும் வகையில் 2023 அக்டோபர் 7 முதல் 16 வரை இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு இந்த மெகா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் மத்தியப் பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சருதா, திரு பிஷ்வேஸ்வர் டூடு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

ஆதிப் பெருவிழா என்பது பழங்குடியினர் தொழில்முனைவு, கைவினை, கலாச்சாரம், சமையல், வணிகம், பண்டைய பாரம்பரிய கலை ஆகியவற்றின் உணர்வைக் கொண்டாடும் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் வருடாந்திர முயற்சியாகும். இது நாடு முழுவதும் உள்ள பழங்குடி மக்களின் வளமான மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது. 150-க்கும் அதிகமான அரங்குகளைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் பழங்குடி மக்களின் கலைகள், கைவினைப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள் மற்றும் சுவையான உணவு வகைகள் இடம் பெறும். குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடி குழுக்கள் மற்றும் வன் தன் கேந்திரா பயனாளிகள் உட்பட சுமார் 336 பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்தப் பெருவிழா இடமளிக்கும்.

2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதிப் பெருவிழாவில் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் விளைவிக்கும் சிறுதானியங்களும் காட்சிப்படுத்தப்படும்.

*****

ANU/PKV/SMB/KPG/KV



(Release ID: 1965038) Visitor Counter : 73