சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அக்டோபர் 6-ம் தேதி உலகப் பெருமூளை வாத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

Posted On: 05 OCT 2023 1:32PM by PIB Chennai

உலகப் பெருமூளை வாத தினம் என்பது உலகளவில் கடைப்பிடிக்கப்படும் தினமாகும். இது பெருமூளை வாதத்தால்  தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் ஏற்படும் தாக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6- ம் தேதி கடைப்பிடிக்கப்படும் இந்த நாள், பெருமூளை வாதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு தளமாக அமைகிறது. பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சமூகத்தில் சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான உலகப் பெருமூளை வாத தினத்தின் கருப்பொருள் "ஒன்றாக இணைந்து வலுவாக இருப்போம்” என்பதாகும்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நாட்டின் மாற்றுத் திறனாளிகள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறது. இத்துறை பெருமூளை வாதம் குறித்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு (2023) அக்டோபர் 6-ம் தேதி உலகப் பெருமூளை வாத தினத்தன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

***

ANU/SMB/PLM/KPG/KV

 



(Release ID: 1964747) Visitor Counter : 184