சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பாதுகாப்பு மற்றும் வெளியேற்ற செயல்முறையை அறிந்துகொள்ள திரு நிதின் கட்கரி ஆகாய பேருந்தில் (ஸ்கை பஸ்) பரிசோதனை பயணம் மேற்கொண்டார்

प्रविष्टि तिथि: 04 OCT 2023 4:27PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி யுஸ்கை தொழில்நுட்பத்தின் பைலட் சான்றிதழ் மற்றும் அனுபவ மையத்தைப் பார்வையிட்டார். பிராகாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பாதுகாப்பு மற்றும் வெளியேற்ற செயல்முறையை அறிந்து கொள்ள ஆகாயப் பேருந்தில் (ஸ்கை பஸ்) பரிசோதனை  பயணம் மேற்கொண்டார்.

யுஸ்கை தொழில்நுட்பம் ஸ்கை பஸ்களை உருவாக்கியுள்ளது. மேலும் ஐஸ்ஸ்கை மொபிலிட்டி இந்த சேவைகளை இந்தியாவுக்கு கொண்டு வர யுஸ்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஸ்கை பஸ் ஒரு நிலையான, நெரிசல் இல்லாத நகர்ப்புற சேவைக்கு உகந்தது. இது மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது. அதே நேரத்தில், நகர்ப்புற குடியிருப்பாளர்களுக்கு திறமையான சேவையை வழங்குகிறது. மேலும், அதன் உயர்த்தப்பட்ட ரயில் கேபிள் அமைப்பு நில பயன்பாட்டைக் குறைக்கிறது.

----------   

AD/ANU/IR/RS/KPG


(रिलीज़ आईडी: 1964278) आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu