பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஸ்ரீநகரின் புகழ்பெற்ற லால்சவுக்கிலிருந்து சிஆர்பிஎஃப் மகளிர் பைக் பயணம் 'யஷஸ்வினி'யை துணைநிலை ஆளுநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
03 OCT 2023 6:07PM by PIB Chennai
சிஆர்பிஎஃப், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, சிஆர்பிஎஃப் பெண் பைக் வீரர்களின் "யஷஸ்வினி" என்னும் நாடு தழுவிய பைக் பயணத்தைத் தொடங்கினர். நாட்டின் பெண் சக்தியைக் கொண்டாடுவதற்காக நாடு தழுவிய பேரணிக்காக பெண் சிஆர்பிஎஃப் அலுவலகங்கள் குழு இன்று காலை ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டது. ஸ்ரீநகர் லால்சவுக்கில் இருந்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேரணியை தொடங்கி வைத்தார். ஸ்ரீநகரில் இருந்து தொடங்கும் பைக் வீரர்கள் குழு 40 மாவட்டங்களைக் கடந்து, இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தின் ஏக்தா நகரை அடையும்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா தனது உரையில், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கும் போது பல கடினமான சூழ்நிலைகளில் சிஆர்பிஎஃப் வீராங்கணைகள் காட்டிய ஈடு இணையற்ற துணிச்சல், உறுதி மற்றும் தைரியத்திற்கு வணக்கம் செலுத்தினார்.
சி.ஆர்.பி.எஃப் வீராங்கணைகளின் யஷஸ்வினி, மகளிர் பைக் பயணம் நாரி சக்தியின் வலிமையின் அடையாளமாகும். இது பெண் சக்தியின் தியாகத்தையும், அவர்களின் தன்னம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது, மேலும் இன்று அவர்கள் மன உறுதி, மற்றும் அர்ப்பணிப்புடன் பல்வேறு துறைகளில் பல மைல்கற்களை அடைந்து வருகின்றனர் என்று திரு சின்ஹா கூறினார்.
பைக் பயணத்தில் பங்கேற்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும் துணைநிலை ஆளுநர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளத்தாக்கு கியூஏடி மற்றும் சிஆர்பிஎப்பின் பைப் பேண்ட் ஆகியவற்றின் வீராங்கணைகள் அற்புதமான நிகழ்ச்சிகளை வழங்கினர்.
மொத்தம் 150 பெண் சிஆர்பிஎஃப் அதிகாரிகள், மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இன்று நாடு தழுவிய பேரணியைத் தொடங்குகின்றனர். 75 ராயல் என்ஃபீல்டு (350 சிசி) மோட்டார் சைக்கிள்களில், இந்த அணிகள் ஸ்ரீநகர், ஷில்லாங் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கின. சுமார் 10,000 கி.மீ தூரம் பயணித்த பின்னர், 2023 அக்டோபர் 31 ஆம் தேதி கேவாடியா குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையில் பைக் ஓட்டிகள் அனைவரும் ஒன்று கூடுவார்கள்.
ஸ்ரீநகர் பைக் வீரர்கள் குழு 2023 அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் ஜம்முவை அடையும். சி.ஆர்.பி.எஃப் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த கூட்டு முயற்சிகளின் முழு பயணத்தின் போது, ஸ்ரீநகர், ஷில்லாங் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மூன்று குழுக்களும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்.சி.சியின் கேடட்கள், சி.சி.ஐ.க்களின் குழந்தைகள், என்.ஒய்.கே.எஸ் உறுப்பினர்கள், வளரிளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் போன்ற "பெண் குழந்தைகளைக் காப்போம்" இலக்கு குழுக்களுடன் கலந்துரையாடும். பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி பணியாளர்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் "பெண் குழந்தைகளைக் காப்போம்" திட்டத்தை மேலும் ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜீவ் ராய் பட்நாகர், சிஆர்பிஎஃப் ஜம்மு காஷ்மீர் மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் அஜய் குமார் யாதவ், சிஆர்பிஎப் ஐஜி. விஜய் பிதுரி, சிவில் மற்றும் போலீஸ் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
***
ANU/AD/PKV/KRS
(Release ID: 1963772)
(Release ID: 1963832)
Visitor Counter : 126