சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

4 மத்திய துணைத் திட்டங்களை உள்ளடக்கிய "ஷ்ரேயாஸ்" திட்டம்

Posted On: 03 OCT 2023 4:18PM by PIB Chennai

"எஸ்.சி.க்களுக்கான உயர்தரக் கல்வி", "எஸ்.சி மற்றும் ஓ.பி.சி.க்களுக்கான இலவச பயிற்சித் திட்டம்", "எஸ்.சி.க்களுக்கான தேசிய வெளிநாட்டுத் திட்டம்" மற்றும் "எஸ்.சி.க்களுக்கான தேசிய ஃபெல்லோஷிப்" ஆகிய 4 மத்தியத் துணைத் திட்டங்களை உள்ளடக்கியது "ஷ்ரேயாஸ்" என்ற குடைத் திட்டம். இந்த துணை திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள் என்பதால், இந்த திட்டங்களுக்கு மாநில வாரியான தரவுகள் பராமரிக்கப்படுவதில்லை. கடந்த 9 ஆண்டுகளில் அதாவது 2014-15-ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டம், செலவின விவரங்கள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

எஸ்.சி மற்றும் ஓ.பி.சி.க்கான இலவச பயிற்சி திட்டம்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு/ தனியார் துறையில் தகுந்த வேலைகளைப் பெறுவதற்கும், புகழ்பெற்ற தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக நல்ல தரமான பயிற்சிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் மொத்த குடும்ப வருமானத்தின் உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் ஆகும். ஆண்டுக்கு, 3,500 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எஸ்.சி: ஓ.பி.சி மாணவர்களின் விகிதம் 70:30 மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 30% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்.சி பிரிவில் போதுமான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை என்றால் அமைச்சகம் இந்த விகிதத்தை தளர்த்தலாம். இருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், 50%க்கும் கீழ் ஆதிதிராவிட மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடாது.

2014-15 முதல் 2022-23 வரை மொத்தம் 19,995 பயனாளிகளுக்கு ரூ.109.77 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எஸ்சி பிரிவினருக்கான  உயர்தரக் கல்வி:

எஸ்சி பிரிவு மாணவர்களிடையே தரமான கல்வியை அங்கீகரித்து, முழு நிதி உதவி அளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப்பிரிவு  மாணவர்கள் 12-ம் வகுப்புக்கு மேல் கல்வி பயில்வதற்கு இத்திட்டம் பொருந்தும். ஒரு முறை உதவித்தொகை வழங்கப்பட்டால், மாணவரின் திருப்திகரமான செயல்திறனுக்கு உட்பட்டு, படிப்பு முடியும் வரை தொடரும். இத்திட்டத்தின் கீழ் மொத்த குடும்ப வருமானத்தின் உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.8லட்சம் ஆகும். தற்போது, அனைத்து ஐஐஎம், ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, எய்ம்ஸ், என்ஐஎஃப்டி, என்ஐடி, என்எல்யு, ஐஎச்எம், சியுக்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள், நாக் ஏ++ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் சிறந்த 100 தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) தரவரிசை நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய 266 உயர் கல்வி நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

மொத்த உதவித்தொகை எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு 21,500 (2021-22 க்கு 4100, 2022-23 க்கு 4200, 2023-24 க்கு 4300, 2024-25 க்கு 4400 மற்றும் 2025-26 க்கு 4500).

 

இத்திட்டத்தின் கீழ், (i) முழு கல்விக் கட்டணம் மற்றும் திருப்பித் தர முடியாத கட்டணங்கள் (தனியார் துறை நிறுவனங்களுக்கு ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.2.00 லட்சம் உச்சவரம்பு இருக்கும்) கல்விப்படி முதல் ஆண்டில் ரூ.86,000 மற்றும் அடுத்த ஆண்டில் ரூ.41,000, வாழ்க்கை மற்றும் பிற செலவுகளை கவனித்துக் கொள்ள வழங்கப்படுகிறது.

2014-15 முதல் 2022-23 வரை 21,988 பயனாளிகளுக்கு மொத்தம் 398.43 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

(iii) எஸ்சி பிரிவினருக்கான தேசிய வெளிநாட்டுத் திட்டம்:

இத்திட்டத்தின் கீழ்  தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு (115 இடங்கள்) நிதியுதவி வழங்கப்படுகிறது. அறிவிக்கப்படாத, நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியினர் (6 இடங்கள்); நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர் பிரிவுகள் (4 இடங்கள்), வெளிநாட்டில் முதுகலை மற்றும் பி.எச்.டி அளவிலான படிப்புகளைத் தொடர. தற்போது இத்திட்டத்தின் கீழ் 125 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர் உள்பட குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள், தகுதித் தேர்வில் 60% க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள், 35 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் சிறந்த 500 கியூஎஸ் தரவரிசை வெளிநாட்டு நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ், விருது பெறுவோருக்கு மொத்த கல்விக் கட்டணம், பராமரிப்பு மற்றும் தற்செயல் கொடுப்பனவு, விசா கட்டணம், வான்வழிப் பயணம் போன்றவை வழங்கப்படுகின்றன.

2014-15 முதல் 2022-23 வரை மொத்தம் 197.14 கோடி ரூபாய் 950 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

(iv) எஸ்சி  மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை:

இத்திட்டத்தின் கீழ், இந்திய பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்கள் / பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் அறிவியல், மானுடவியல் மற்றும் சமூக அறிவியலில் எம்.பில் / பி.எச்.டி பட்டங்களுக்கு வழிவகுக்கும் உயர் கல்வியைத் தொடர ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

யு.ஜி.சி.யின் தேசிய தகுதித் தேர்வு - ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (நெட்-ஜே.ஆர்.எஃப்) மற்றும் யு.ஜி.சி-அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (யு.ஜி.சி-சி.எஸ்.ஐ.ஆர்) தேர்வு தகுதி பெற்ற அறிவியல் பிரிவுக்கான இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் ஆண்டுக்கு 2000 புதிய இடங்களை (அறிவியல் பிரிவுக்கு 500 மற்றும் மானுடவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு 1500) இந்த திட்டம் வழங்குகிறது.

----

ANU/AD/PKV/KPG



(Release ID: 1963795) Visitor Counter : 137


Read this release in: Hindi , Urdu , Telugu , English