பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023 அக்டோபர் 03 முதல் 06 வரை டேராடூனில் 4 வது தேசிய ஏகலவியா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் கலாச்சார, இலக்கிய மற்றும் கலை விழா - 2023-க்குப் பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது


மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்

Posted On: 02 OCT 2023 4:02PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் (நெஸ்ட்ஸ்), உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 6 வரை 4 வது தேசிய ஏகலவியா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் கலாச்சார, இலக்கிய மற்றும் கலா உத்சவ் - 2023 ஐ நடத்துகிறது.

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சாருதா மற்றும்  பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில்  நாடு முழுவதிலுமிருந்து 1500 க்கும் மேற்பட்ட ஏகலவியா மாதிரி உறைவிடப் பள்ளி (ஈ.எம்.ஆர்.எஸ்) மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு கலை விழா மூலம் பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

 

பழங்குடியினரை மைய நீரோட்டத்துடன் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டு, பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைய சம வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுவதற்காக, அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் கலாச்சார விழாக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறது, இது பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு களங்களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த  தேசிய தளத்தை வழங்குகிறது.

இந்த ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தின் ஏகலவியா வித்யாலயா சங்கதன் சமிதி (ஈ.வி.எஸ்.எஸ்) டேராடூனில் உள்ள மகாராணா பிரதாப் விளையாட்டுக் கல்லூரியில் இந்த நிகழ்வை நடத்துகிறது.

ஈ.எம்.ஆர்.எஸ் என்பது இந்தியா முழுவதும் உள்ள இந்திய பழங்குடியினருக்கு மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கான மத்திய அரசின் திட்டமாகும். இது மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் முதன்மைத் தலையீடுகளில் ஒன்றாகும். மேலும் தொலைதூரப் பழங்குடிப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக 2018-19 ஆம் ஆண்டில்  மறுசீரமைக்கப்பட்டது.

***

ANU/AD/SMB/DL


(Release ID: 1963463) Visitor Counter : 121


Read this release in: Telugu , English , Urdu , Hindi