நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023, செப்டம்பர் 30 வரை வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் 30 லட்சத்துக்கும் அதிகமான தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

Posted On: 02 OCT 2023 6:26PM by PIB Chennai

2023 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சுமார் 29.5 லட்சம் வரி தணிக்கை அறிக்கைகள் உள்பட 30.75 லட்சத்துக்கும் அதிகமான தணிக்கை அறிக்கைகள் இ-ஃபைலிங் போர்ட்டலில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  படிவம் எண் 29 பி, 29 சி, 10 சி.சி.பி போன்றவற்றில் வரித் தணிக்கை அறிக்கைகள் (டி.ஏ.ஆர்) மற்றும் பிற தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வது தொடர்பாக சரியான நேரத்தில் இணக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வரி செலுத்துவோருக்கு வசதியாக, விரிவான மக்கள் தொடர்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரித் தணிக்கை அறிக்கைகள் மற்றும் பிற தணிக்கைப் படிவங்களைக் குறிப்பிட்ட தேதிக்குள் தாக்கல் செய்ய வரி செலுத்துவோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், சமூக ஊடகங்கள் மற்றும் வருமான வரி போர்ட்டலில் தகவல் செய்திகளுடன் சுமார் 55.4 லட்சம் தொடர்புகள்  மேற்கொள்ளப்பட்டன. வழிகாட்டும் வகையில் வருமான வரி இணையதளத்தில் பல்வேறு பயனர் விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் வரி செலுத்துவோர் மற்றும் வரி தொழில்முறையாளர்களுக்குக் குறிப்பிட்ட தேதிக்குள் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதில் உதவியாக இருந்தன.

இ-ஃபைலிங் போர்ட்டல் அனுப்புவதையும் பெறுவதையும்  வெற்றிகரமாகக் கையாண்டது, வரி செலுத்துவோர் மற்றும் வரி தொழில்முறையாளர்களுக்குத் தணிக்கை அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான தடையற்ற அனுபவத்தை வழங்கியது. இந்த மென்மையான தாக்கல் அனுபவம் சமூக ஊடகங்கள் உள்பட பல்வேறு தளங்களில் நிபுணர்களால் பாராட்டப்பட்டது.

இ-ஃபைலிங் உதவி மேசைக் குழு 2023 செப்டம்பர் மாதத்தில் வரி செலுத்துவோரிடமிருந்து சுமார் 2.36 லட்சம் கேள்விகளைக் கையாண்டுள்ளது, இது வரி செலுத்துவோர் மற்றும் வரி தொழில்முறையாளர்களை கணக்கு தாக்கல் செய்யும் காலத்தில் முனைப்புடன் ஆதரிக்கிறது.

***

ANU/AD/SMB/DL


(Release ID: 1963439) Visitor Counter : 131