குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 OCT 2023 7:06PM by PIB Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து குடிமக்கள் சார்பிலும் அவருக்கு எனது தாழ்மையான மரியாதையை செலுத்துகிறேன்.

சத்தியம், அகிம்சை ஆகிய காந்தியடிகளின் கொள்கைகள் உலகிற்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தன. காந்தியடிகள் தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சைக்காகப் போராடியதுடன் மட்டுமல்லாமல், தூய்மை, பெண்கள் அதிகாரம், தற்சார்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் ஆகியவற்றுக்காகவும், தீண்டாமை, சமூக பாகுபாடு மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராகவும் போராடினார். காந்தியடிகள் நம்மை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டி, வரலாற்றின் போக்கை மாற்றி, நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மாபெரும் இயக்கத்தை வழிநடத்தினார்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா மற்றும் உலகின் பல அரசியல்வாதிகள் காந்திஜியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டனர். காந்தியடிகளின் வலுவான மற்றும் துடிப்பான சித்தாந்தம் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும்.

காந்தி ஜெயந்தி நன்னாளில், அவரது கொள்கைகள்  மற்றும் போதனைகளை நமது சிந்தனை, பேச்சு மற்றும் செயலில் பின்பற்றி, நாட்டின் நலனுக்காக நமது சுயத்தை அர்ப்பணிப்போம் என்று உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.

***

ANU/AD/PKV/DL


(रिलीज़ आईडी: 1962879) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi