விவசாயத்துறை அமைச்சகம்

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் 30 வரை சிறப்பு இயக்கம் 3.0 கீழ் ஆயத்த கட்டத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் செயல்பாடுகள்

Posted On: 30 SEP 2023 6:00PM by PIB Chennai

அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை பைசல் செய்வதற்காக 14.09.2023 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்தர் சிங்  சிறப்பு இயக்கம் 3.0-ஐத் தொடங்கிவைத்தார். சிறப்பு இயக்கம் 3.0 2023 செப்டம்பர் 15 முதல் 30 வரை ஆயத்த கட்டம் மற்றும் 2023 அக்டோபர் 2 முதல் 31 வரை முதன்மை கட்டம் என இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

 

ஆயத்த கட்டமாக, அனைத்துப் பிரிவு மற்றும் சார்நிலை / இணைக்கப்பட்ட அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நிலுவையில் உள்ள கோப்புகளை அடையாளம் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ட்விட்டர், லிங்க்ட்இன், இன்ஸ்டாகிராம்முகநூல், த்ரெட்ஸ், பப்ளிக் ஆப் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஆயத்த கட்டம் குறித்த 100 க்கும் மேற்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

இதுவரை இணைச் செயலாளர் மற்றும் துறையின் ஒருங்கிணைப்பு அலுவலர் தலைமையில், துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மற்றும் சார்நிலை அலுவலகங்களின் அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் காணொலிக் காட்சி மூலம்  3 கூட்டங்கள் நடத்தப்பட்டு, தூய்மை இடங்கள், இட மேலாண்மை, குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல், பிரதமர் அலுவலக குறிப்புகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் அதன் மேல்முறையீடுகள் மற்றும் பதிவேடு மேலாண்மை போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

 

2023, செப்டம்பர் 15 முதல் 30 வரையிலான ஆயத்தக் கட்டத்தின் போது, சிறப்பு இயக்கம் 3.0 க்கான இலக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: பிரதான கட்டம் 2023 அக்டோபர் 2 முதல் தொடங்கும். சிறப்பு இயக்கம் 3.0 க்கான ஆயத்த கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அடைய உறுதியான மற்றும் அர்ப்பணிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

*******  

AD/ANU/SMB/KRS



(Release ID: 1962530) Visitor Counter : 77


Read this release in: English , Urdu , Hindi , Telugu