ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மையே சேவை: கர்நாடகாவில் 52 கோவில் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு புத்துயிர் பெறச் செய்யப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
30 SEP 2023 3:26PM by PIB Chennai
நாடு முழுவதும் தற்போது தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தூய்மை இந்தியா இயக்கத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தனித்துவமான வழியில் பங்களித்து வருகின்றனர்.
அத்தகைய ஒரு நிகழ்வாக கர்நாடக மாநிலத்தில் கோயில் நீர்நிலைகளை மக்கள் சீரமைத்துள்ளனர். கர்நாடகாவில் நடந்து வரும் 'தூய்மையே சேவை' இயக்கத்தின் போது நான்கு மாவட்டங்களில் உள்ள 52 க்கும் மேற்பட்ட கோவில் நீர்நிலைகள் சுத்தம் செய்யப்பட்டு புத்துயிரூட்டப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணியின் மூலம் ராம்நகர், கதக், மண்டியா மற்றும் கோலார் மாவட்டங்களில், பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட கோவி்ல் நீர்நிலைகள் புத்துயிர் பெற்றுள்ளன.
Release ID= 1962351
***
(रिलीज़ आईडी: 1962522)
आगंतुक पटल : 134