நிதி அமைச்சகம்

2023 அக்டோபர் 11 ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள டி.ஐ.ஆர் நிர்வாகக் குழு தேர்தலில் (டி.ஐ.ஆர். - எக்ஸ்.பி) இந்தியாவின் மனுவுக்கு சிபிஐசி ஆதரவு திரட்டுகிறது

Posted On: 30 SEP 2023 4:10PM by PIB Chennai

டி..ஆர் கார்னெட்ஸ் (டி..ஆர் மாநாடு, 1975 - the Convention on International Transport of Goods Under Cover of TIR Carnets) என்ற சரக்குகளின் சர்வதேச போக்குவரத்து மாநாட்டுக்கான ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர்கள், தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான தேர்தல் தொடர்பாக புதுதில்லியில் நேற்று (29-09-2023) ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய நிதி அமைச்சகத்தின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கான தேர்தல்களை 11.10.2023 அன்று ஜெனீவாவில் டி..ஆர் நிர்வாகக் குழுவின் 81 வது அமர்வின் போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த டி..ஆர்.எக்ஸ்.பி தேர்தலுக்கான இந்தியாவின் வேட்புமனுவுக்கு, சிபிஐசி-யின் முதன்மை ஆணையரும் சர்வதேச சுங்க உறவுகளின் தலைவருமான திரு. விமல் குமார் ஸ்ரீவஸ்தவா ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் அவர் ஆதரவு கோரினார்இந்த உடன்படிக்கையின் கீழ் சர்வதேச போக்குவரத்து கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது என்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்தியா அங்கீகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. டி..ஆர் நிர்வாகக் குழுவில் இந்தியாவின் பிரதிந்தித்துவம் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம், பல்நோக்கு போக்குவரத்து அமைப்பின் உலகளாவிய ஒருங்கிணைப்பிற்கு இந்தியா கணிசமாக பங்களிக்க விரும்புகிறது என்று அப்போது கூறப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில், வருவாய்த் துறை செயலர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா, மேற்குப் பகுதிக்கான வெளியுறவுத் துறை செயலர் திரு சஞ்சய் வர்மா, சிபிஐசி சிறப்புச் செயலாளரும், தலைவருமான திரு சஞ்சய் குமார் அகர்வால், மற்றும் சிபிஐசியின் சிறப்பு செயலாளரும் உறுப்பினருமான திரு சுர்ஜித் புஜாபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 

ஜெனீவாவில் 11.10.2023 அன்று நடைபெறவுள்ள டி..ஆர் நிர்வாகக் குழுத் தேர்தலில் இந்தியா போட்டியிடுவதற்கு பல பிரமுகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இக்கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

 

டி..ஆர் மாநாடு பற்றி

 

டி..ஆர் மாநாடு, 1975 என்பது சுங்கக் கட்டுப்பாட்டின் சர்வதேச ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாகும். இது ஒரே சுங்க ஆவணம் (டி..ஆர் கார்னெட்) மற்றும் ஒரு ஒருங்கிணைந்த உத்தரவாத முறையைப் பயன்படுத்தி சர்வதேச எல்லைகளைக் கடக்கும் பொருட்களை தடையின்றி கொண்டு செல்ல உதவுகிறது. இதில் இந்தியா உட்பட 78 ஒப்பந்த நாடுகள் உள்ளன. 33,000 க்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்கள் டிஐஆர் முறையைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் டிஐஆர் போக்குவரத்துகள் மேற்கொள்ளப்படுகின்றன. டி..ஆர் நிர்வாகக் குழு (டி..ஆர்.எக்ஸ்.பி) என்பது துணை அமைப்பாகும். இது டி..ஆர் நடைமுறையைப் பயன்படுத்துவதை மேற்பார்வையிடுவதுடன் அதற்கு ஆதரவை வழங்குகிறது. இது வெவ்வேறு ஒப்பந்த நாடுகளைச் சேர்ந்த 9 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

 

இந்தியா ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வர்த்தக நாடாகவும், சர்வதேச போக்குவரத்து வழித்தடத்தில் (.என்.எஸ்.டி.சி) முக்கிய பங்கேற்பாளராகவும் உள்ளது. 2017 ஆம் ஆண்டில் இந்த உடன்படிக்கையில் இணைந்ததிலிருந்து, டி..ஆரின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

Release ID= 1962358

******

ANU/AD/PLM/KRS



(Release ID: 1962436) Visitor Counter : 84


Read this release in: Telugu , English , Urdu , Hindi