குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்

Posted On: 28 SEP 2023 5:19PM by PIB Chennai

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் மறைவுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் .

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில், துணை ஜனாதிபதி கூறியுள்ளதாவது;

"இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்திய விவசாயத்திற்கு அவரது மகத்தான பங்களிப்பு நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது, அதே நேரத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளின் செழிப்புக்கு பங்களித்தது. இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

***

ANU/AD/PKV/DL



(Release ID: 1961803) Visitor Counter : 122