நித்தி ஆயோக்
2023 உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இந்தியா 40 வது இடத்தைத் தக்கவைத்துள்ளது
प्रविष्टि तिथि:
28 SEP 2023 10:31AM by PIB Chennai
உலக அறிவுசார் சொத்து அமைப்பு வெளியிட்டுள்ள 2023 உலகளாவிய புத்தாக்க குறியீட்டு தரவரிசையில் 132 பொருளாதாரங்களுள் இந்தியா 40 வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் (ஜி.ஐ.ஐ) 2015-ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ஆம் ஆண்டில் 40 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பெருந்தொற்றால் ஏற்பட்ட மோசமான நெருக்கடிக்கு எதிரான நமது போரில், புதிய கண்டுபிடிப்புகள் முன்னிலையில் இருந்து வருவதோடு, நாட்டின் மீள்திறனை இயக்குவதில் முக்கியமானதாகவும் இருக்கும் என்பது தற்சார்பு இந்தியாவிற்கான பிரதமரின் அழைப்பில் வெளிப்படுகிறது.
மகத்தான அறிவு மூலதனம், துடிப்பான புத்தொழில் சூழலியல் மற்றும் பொது மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் அற்புதமான பணிகள் முதலியவை ஜி.ஐ.ஐ தரவரிசையில் நிலையான முன்னேற்றத்தின் காரணிகளாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை போன்ற அறிவியல் துறைகள் உள்பட அரசின் அனைத்துத் துறைகளும், உயிரி தொழில்நுட்பத்துறை, விண்வெளித் துறை, மற்றும் அணுசக்தித் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறை போன்ற துறைகளும் தேசிய புத்தாக்க சூழலியலை வளப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடல் புத்தாக்க இயக்கம் இதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
மின்சார வாகனங்கள், உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், விண்வெளி, மாற்று எரிசக்தி ஆதாரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் கொள்கை அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதற்கான தேசிய முயற்சிகளை உகந்ததாக்குவதை உறுதி செய்வதற்காக நித்தி ஆயோக் அயராது உழைத்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள அரசுகள், அந்தந்த நாடுகளின் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை மதிப்பிடுவதற்கு ஜி.ஐ.ஐ ஒரு நம்பகமான கருவியாகும்.
புத்தாக்கம் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பும் (சி.ஐ.ஐ) ஒத்துழைத்து வருகிறது. இந்த ஆண்டு, சி.ஐ.ஐ மற்றும் உலக அறிவுசார் சொத்து அமைப்பு (டபிள்யூ.ஐ.பி.ஓ) ஆகியவற்றுடன் இணைந்து, 2023 செப்டம்பர் 29 அன்று ஜி.ஐ.ஐ 2023 இன் இந்திய அறிமுகத்தை நிதி ஆயோக் காணொலிக் காட்சி வாயிலாக நடத்துகிறது. இந்த தொடக்க விழாவில் நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர் திரு சுமன் பேரி, நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், நித்தி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி திரு பி.வி.ஆர். சுப்ரமணியம், டபிள்யூ.ஐ.பி.ஓ தலைமை இயக்குநர் திரு டேரன் டாங் உள்ளிட்ட மூத்த பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
***
ANU/AD/RB/DL
(रिलीज़ आईडी: 1961625)
आगंतुक पटल : 645