குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மிலாது நபியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2023 6:47PM by PIB Chennai

மிலாது நபியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் மிலாது நபி திருநாளில்நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அமைதி மற்றும் அன்பின் செய்தியை உலகிற்கு வழங்கியுள்ளார். நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ அவரது போதனைகள் நம்மைத் தூண்டுகின்றன.

அவரது கொள்கைகளை நினைவு கூர்ந்து, மனித குலத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்"

***

 

ANU/AD/PKV/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1961493) வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi