சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதியோர் குறித்த அறிக்கை 2023, இந்தியாவில் முதியோர் பராமரிப்பு குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வெளிப்படுத்தியுள்ளது

Posted On: 27 SEP 2023 12:47PM by PIB Chennai

 

யு.என்.எஃப்.பி. (ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம்) இந்தியா, சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்துடன் (..பி.எஸ்) இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முதியோர் குறித்த அறிக்கை 2023- வெளியிட்டது. இந்த அறிக்கை இந்தியாவில் முதியோர் பராமரிப்பைச் சுற்றியுள்ள சவால்கள், வாய்ப்புகள் மற்றும் நிறுவனப் பதில்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ஏனெனில் இந்தியா, வயதானவர்கள்  மக்கள் தொகையை நோக்கி செல்கிறது.

இந்த அறிக்கையை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (இந்திய அரசு) செயலாளர் திரு சவுரப் கார்க் மற்றும் யு.என்.எஃப்.பி. இந்தியா பிரதிநிதியும் பூட்டானின் இயக்குநருமான திருமதி ஆண்ட்ரியா எம்.வோஜ்னர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

 இந்தியாவில் உள்ள வயதான நபர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் நலன் குறித்த முழுமையான ஆய்வை இந்த அறிக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது 2017-18, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்திய அரசின் மக்கள்தொகைக் கணிப்புகள் (2011-2036) மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் சமீபத்திய தரவுகளைப் பயன்படுத்தி சமீபத்திய கண்ணோட்டத்தை வழங்குகிறது.

" நமது வயதான மக்களுக்கு ஆரோக்கியமான, கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழத் தேவையான கவனிப்பு மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்" என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (இந்திய அரசு) செயலாளர் திரு சவுரப் கார்க் கூறினார்இந்த இலக்கை அடைவதற்கான மதிப்புமிக்க வரைபடத்தை அறிக்கை வழங்குகிறது, மேலும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்த அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

அறிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்புகள் வயதானவர்களின் நல்வாழ்வு தொடர்பான பலவிதமான பகுப்பாய்வுகளை உள்ளடக்கியது, அவற்றுள்:

முதியோர்களின் தனித்துவமான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முதியோர் கவனிப்பை மேம்படுத்துதல்.

முதியோர்களின் சுகாதாரம், நிதி மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு தேவைகளை நிவர்த்தி செய்யும் பல அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள்.

சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் கணினி மற்றும் இணைய பயன்பாட்டு அமர்வுகள் மூலம் டிஜிட்டல் அதிகாரமளித்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முதியோர் நலனுக்கான கொள்கைகளை வகுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைச்சுக் குழுக்கள்.

மகிழ்ச்சியான முதுமைக்கான கார்ப்பரேட் முயற்சிகள், சமூக உதவி, முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

முழுமையான அறிக்கை 2023 அணுக [வலைத்தள இணைப்பு] பார்க்கவும்.

இணையத்தளம் - https://india.unfpa.org/en    

 

(வெளியீட்டு ஐடி: 1961168)

 

ANU/AP/PKV/KRS


(Release ID: 1961455) Visitor Counter : 214