சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 68-வது நிறுவன தின விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகல் தலைமை தாங்கினார்
Posted On:
25 SEP 2023 3:24PM by PIB Chennai
"எய்ம்ஸ் தனது 68 ஆண்டுகளில், நாட்டின் முதன்மையான சுகாதார நிறுவனமாக அதன் நற்பெயரை உண்மையிலேயே நிலைநிறுத்தியுள்ளது. இன்று இந்தியாவின் எந்தக் கிராமத்திலும் ஒரு குழந்தைக்கு கூட எய்ம்ஸ் பெயர் தெரியும்” என்று நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் முன்னிலையில் புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) 68-வது நிறுவன தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகல் கூறியுள்ளார்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (என்.ஐ.ஆர்.எஃப்) படி, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து பேராசிரியர் பாகல் மகிழ்ச்சி தெரிவித்தார். எய்ம்ஸ் ஏற்கனவே ஒரு அடையாளமாக மாறியுள்ளது, அதன் நற்பெயர் நாடு முழுவதும் பரவியுள்ளது என்று அவர் கூறினார். இந்த இமேஜைப் பராமரிக்கவும், எய்ம்ஸ் பெயரை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லவும், அதிகாரிகளை அவர் கேட்டுகொண்டார்.
அதிக பயிற்சி பெற்ற மனித வளம் காரணமாக இந்தியாவை இன்று சுகாதாரத்தில் எந்த வளர்ந்த நாட்டுடனும் ஒப்பிட முடியும் என்று மத்திய சுகாதார அமைச்சர் கூறினார். வளர்ந்த நாடுகளில் விட இந்தியர்கள் அதிக சதவீத மருத்துவர்களைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் நாடு ஏற்கனவே அதன் தடுப்பூசி உற்பத்தி திறன்கள், அதன் மருந்து தொழில்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்துறையில் அதன் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றது என்று அவர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நோய்த்தடுப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா முழுமையான சுகாதாரத்தை ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
"எய்ம்ஸ்: இந்தியாவின் சுகாதார பாதுகாப்பு" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகல் பார்வையிட்டு மாணவர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புக்காக பரிசளித்தார். எய்ம்ஸ் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், அவர்கள் எப்போதும் தங்கள் பொறுப்புகளை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விழாவில் டாக்டர் வி.கே.பால் வைரவிழா சொற்பொழிவாற்றினார். இந்தியாவின் கொவிட் -19 தடுப்பூசி பயணத்தைப் பற்றி அவர் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் பேராசிரியர் எம். சீனிவாஸ், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டீன் பேராசிரியர் மினு பாஜ்பாய், பதிவாளர் பேராசிரியர் கிரிஜா பிரசாத் ரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
ANU/SM/PKV/AG/KPG
(Release ID: 1960513)
Visitor Counter : 110