வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு: தூய்மைப் பணியின் முன்னணியில் இளம் படைப்பாளிகள்

Posted On: 25 SEP 2023 12:42PM by PIB Chennai

கடந்த 9 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியின் விளைவாக இன்று தூய்மை ஒரு திருவிழா போல கொண்டாடப்படுகிறது. சமூகத்தின் அனைத்து தரப்பு குடிமக்களும் குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான விழாக்களில் இணைகிறார்கள். தூய்மையே முக்கியம்- தூய்மையே சேவை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. பெரியவர்களும், குழந்தைகளும் இந்த தூய்மை இயக்கத்தில் அதிக அளவில் இணைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தூய்மையே சேவை இயக்கம் தினமும் மாணவர்களின் செயல்பாடுகளுடன் திட்டமிடப்பட்டுள்ளது.  பள்ளி, கல்லூரி மாணவர்களை பெருமளவில் திரட்டி சுகாதாரப் புரட்சிக்கு உத்வேகம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பரப்ப பல முக்கிய நடவடிக்கைகள் மற்றும் சிறிய அளவிலான இயக்கங்கள் நடத்தப்பட்டன.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்பு உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட தூய்மையே சேவை நடவடிக்கைகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

பொது விழிப்புணர்வு மற்றும் தூய்மை இயக்கங்கள் தவிர, பல நகர்ப்பு உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை நிலையங்களை காண மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பள்ளிகளில் கழிவுகளில் இருந்து உபயோகமான பொருட்கள் தயாரிப்பதற்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல மாணவர்கள் கழிவுகளிலிருந்து கலைப்பொருட்களை தயாரித்து, கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தனர்.

மேலும், ஈர மற்றும் உலர் கழிவுகளை  பிரிப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் ஈரக்கழிவுகளை தாங்களே நிர்வகிக்க ஆன்சைட் உரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு, வீட்டில் உரம் தயாரிப்பதற்கான எளிய நுட்பங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன. பிரச்சாரத்தின் போது பேரணிகள், மாரத்தான்கள், சைக்ளோதான்கள் போன்றவையும் நடத்தப்பட்டன. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சில பள்ளிகளில், துணிப்பைகள் வினியோகிக்கப்பட்டன. மூல உரம் பிரித்தல் மற்றும் வீட்டு உரம் தயாரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. எதிர்காலத்தில் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போன்ற இளைஞர்களின் ஈடுபாடும், முனைப்பான பங்களிப்பும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் தமிழக மாணவர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

***


 

AD/ANU/IR/RS/KPG


(Release ID: 1960353) Visitor Counter : 160