தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆராய்ச்சி & வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்த ஆலோசனை அறிக்கை மீது கருத்து கேட்பு

Posted On: 23 SEP 2023 4:31PM by PIB Chennai

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத்தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்' குறித்த ஆலோசனை அறிக்கை டிராய் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது கருத்துகள் கூறுமாறு டிராய் அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த ஆலோசனை அறிக்கையின் நோக்கம், நாட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான சூழலை உருவாக்குவதாகும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது, "மத்திய மற்றும் தெற்கு ஆசியா" பிராந்தியத்தில் மிக உயர்ந்த தரவரிசை பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 2022 இல் 40வது இடத்தில்உள்ளது. மக்களின் அறிவுசார் சொத்துரிமைகளை (ஐபிஆர்) உருவாக்குவதில் நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒழுங்கான வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்த டிராய் சட்டம் 1997 இன் படி, இந்த முக்கியமான விஷயத்தில் இந்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் பங்கெடுப்பாளர்களுடன் கலந்தாலோசிக்க ஆணையம் முடிவு செய்தது.

ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் ஐ.ஐ.டி ஹைதராபாத் போன்றவற்றிலிருந்து கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆலோசனை அறிக்கையில், இந்தியாவில் தற்போதுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பில் தலையீடு தேவைப்படும் முக்கியமான பிரச்சினைகளை டிராய் பகுப்பாய்வு செய்துள்ளது.

ஆலோசனை அறிக்கையில், டிராய் ஒரு வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது மற்றும் அதை செயல்படுத்த தீர்க்கப்பட வேண்டிய சாத்தியமான சிக்கல்களைப் பற்றி விவாதிக்கிறது.

இந்த ஆலோசனை அறிக்கையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு துறையில் முன்னணி நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பையும் டிராய் ஆராய்ந்துள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சர்வதேச சிறந்த நடைமுறைகள் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் அதன் லட்சியத்தில் முக்கிய கற்றல்களாக செயல்படக்கூடும்.

இந்த ஆலோசனை அறிக்கை டிராய் வலைத்தளத்தில் (www.trai.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின் மீது  பங்கெடுப்பாளர்கள் அக்டோபர் 23ஆம் தேதிக்குள் எழுத்து பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கலாம். நவம்பர் 6ஆம் தேதிக்குள் எதிர் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை advisorit@trai.gov.in  மற்றும் ja-cadiv@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். ஏதேனும் விளக்கம் / தகவல் பெற வேண்டும் எனில், ஆலோசகர் (சிஏ, ஐடி & டிடி) திரு ஆனந்த் குமார் சிங் அவர்களை  தொலைபேசி எண்+91-11-23210990 இல் தொடர்பு கொள்ளலாம்.

***

ANU/SM/BS/DL


(Release ID: 1959967) Visitor Counter : 152