பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-இந்தோனேஷியா-ஆஸ்திரேலியா முத்தரப்பு கடற்பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல் சஹ்யாத்ரி பங்கேற்பு

Posted On: 22 SEP 2023 5:38PM by PIB Chennai

இந்திய கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் .என்.எஸ் சஹ்யாத்ரி, இந்தோ-பசிபிக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ராயல் ஆஸ்திரேலிய கடற்படை (ஆர்..என்) மற்றும் இந்தோனேசிய கடற்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன்  செப்டம்பர் 20 முதல் 21 வரை முதல் முத்தரப்பு கடல்சார் கூட்டாண்மை பயிற்சியில் அந்தக் கப்பல்  பங்கேற்றது .

இந்த முத்தரப்பு பயிற்சி மூன்று கடல்சார் நாடுகளுக்கும் தங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நிலையான, அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதற்கான கூட்டுத் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்தப் பயிற்சியில் பங்கேற்ற கடற்படைகள் ஒருவருக்கொருவர் பெற்ற அனுபவம் மற்றும் நிபுணத்துவத்திலிருந்து பயனடைய வாய்ப்பளித்தது. சிக்கலான உத்திகள் மற்றும் வியூகப்  பயிற்சிகள், குறுக்கு-டெக் வருகைகள் மற்றும் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்களின் குறுக்கு-டெக் தரையிறக்கங்கள் ஆகியவை பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் ஒருவருக்கொருவர் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நடத்தப்பட்டன.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட புராஜெக்ட் -17 வகுப்பு மல்டிரோல் ஸ்டெல்த் போர்க்கப்பல்களின் மூன்றாவது கப்பலான .என்.எஸ் சஹ்யாத்ரி, மும்பையின் மசாகான் டாக் லிமிடெட்டில் கட்டப்பட்டது, இது கேப்டன் ராஜன் கபூரால் வழிநடத்தப்பட்டது.

(வெளியீட்டு ஐடி: 1959717)

***

 

AP/ANU/PKV/KRS


(Release ID: 1959770) Visitor Counter : 161


Read this release in: English , Urdu , Marathi , Hindi