விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெல் சாகுபடி பரப்பு 411 லட்சம் ஹெக்டேரைக் கடந்துள்ளது

Posted On: 22 SEP 2023 1:18PM by PIB Chennai

2023 செப்டம்பர் 22, நிலவரப்படி கரீஃப் பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்த முன்னேற்றத்தை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.

2022-ல் 400.72 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி பரப்பு  2023-ல் 411.52 லட்சம் ஹெக்டேராக இருந்தது. பயறு வகைகள்  சாகுபடி பரப்பு 2023-ல் 122.57 லட்சம் ஹெக்டேராக உள்ளது.

சிறுதானியங்கள் மற்றும் மோட்டா ரக பயறு வகைகளின் சாகுபடி பரப்பு 2022 விட, 3 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து 2023-ல் 186.07 லட்சம் ஹெக்டேராகியுள்ளது. 2023-ல் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பு  192. 91 லட்சம் ஹெக்டேராகவும், கரும்பு சாகுபடி பரப்பு 59.91 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளது.

2023-ல் சணல் சாகுபடி பரப்பு 6.59 லட்சம் ஹெக்டேராகவும், பருத்தி சாகுபடி பரப்பு 123.42 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளது. கரீஃப் பருவத்தில் இவற்றின் மொத்த சாகுபடி பரப்பு 1102.99 லட்சம் ஹெக்டேராகும்.

 

*****

AD/SMB/RS/KPG


(Release ID: 1959656) Visitor Counter : 150