அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் சிறப்பு முகாம்
Posted On:
22 SEP 2023 1:21PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை (டி.எஸ்.ஐ.ஆர்) சிறப்பு பிரச்சாரம் 2.0 இன் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக டிசம்பர் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான காலகட்டத்தில் எம்.பி குறிப்புகள், பிரதமர் அலுவலக குறிப்புகள், ஐ.எம்.சி குறிப்புகள் மற்றும் பொதுமக்களின் குறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளின் நிலுவையை வெற்றிகரமாக குறைத்துள்ளது. டி.எஸ்.ஐ.ஆர் மற்றும் அதன் சி.பி.எஸ்.இ.க்கள் அதாவது சி.இ.எல், என்.ஆர்.டி.சி மற்றும் தன்னாட்சி அமைப்பான சி.எஸ்.ஐ.ஆர் ஆகியவை இந்த விசயங்களை தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
டி.எஸ்.ஐ.ஆரின் டி.ஜி சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் செயலாளரின் தீவிர தலைமையின் கீழ், தூய்மை குறித்த சிறப்பு பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியான டி.எஸ்.ஐ.ஆரின் இணை செயலாளரின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ், பிரச்சாரத்தின் போது ஒரு அற்புதமான செயல்திறன் எட்டப்பட்டது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 587 கோப்புகள் பைசல் செய்யப்பட்டுள்ளன, 06 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன, 620 பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டன, கழிவுகளை அகற்றுவதன் மூலம் ரூ.44,128/- ஈட்டப்பட்டது, 10 ஐ.எம்.சி குறிப்பு (அமைச்சரவை முன்மொழிவுகள்), 13 பிரதமர் அலுவலக குறிப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நிலுவையில் உள்ள தொகையைக் குறைக்கவும், வளாகங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் தூய்மையை உறுதி செய்யவும் டி.எஸ்.ஐ.ஆர் உறுதிபூண்டுள்ளது. இப்பணிக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், இத்துறை அதன் பொதுத்துறை நிறுவனங்களான சி.இ.எல்., என்.ஆர்.டி.சி., மற்றும் தன்னாட்சி அமைப்பான சி.எஸ்.ஐ.ஆர் ஆகியவற்றுடன் இணைந்து 2023 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மையை மேம்படுத்துவதற்கும் நிலுவையில் உள்ள குறிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கும் சிறப்பு முகாம் 3.0 ஐ ஏற்பாடு செய்யும்.
----
ANU/AD/PKV/KPG
(Release ID: 1959651)
Visitor Counter : 130