வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மையான குப்பையில்லா நகரத்தை உருவாக்க தானே இளைஞர்கள் தீவிரம்
प्रविष्टि तिथि:
21 SEP 2023 5:31PM by PIB Chennai
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் குப்பையில்லா நகரங்கள் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நாட்டின் சுகாதார இயக்கத்தை வழிநடத்துவதில் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா திகழ்கிறது. மஹாராஷ்டிராவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று விநாயகர் சதூர்த்தி திருவிழா. கடந்த காலங்களில், விநாயகர் சிலை கரைப்பு குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் குறித்தும் குரல்கள் எழுப்பப்பட்டன. அதைச் செய்ய தற்போது இளம் தலைமுறையினர் முன்வந்துள்ளனர்.
தானே நகரின் 493 பள்ளிகளுக்கு இடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலை தயாரிப்பு தொடர்பாக பள்ளிகளுக்கு இடையிலான போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் 22,177 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகளை உருவாக்கி சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் 2,200 க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் உறுதிமொழி எடுத்தனர். உள்ளூர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து சதுப்பு நிலங்களை தூய்மைப்படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
தானேயில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளில் பொதுமக்களும் பங்கேற்றனர்.
விநாயகர் சிலை கரைப்பின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தானே ரயில் நிலையத்தில் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட்டவர்கள் பங்கேற்றனர். தானே மாநகராட்சி மலைப்பகுதி தூய்மை இயக்கத்தையும் ஏற்பாடு செய்தது. இதில், 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். பார்சிக் மலைப்பகுதியை அவர்கள் தூய்மைப்படுத்தி, உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்திய தூய்மை லீக்கை முன்னிட்டு, தானேவில் "ஏக் மினிட் தானே சதி" என்ற புதுமையான கான்செப்ட் தொடங்கப்பட்டது. தாதோஜி கொண்டதேவ் ஸ்டேடியத்தில் 25,000 பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான மக்கள் திரண்டு, தானேவை தூய்மையாக்க தினமும் ஒரு நிமிடம் ஒதுக்குவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த ஜன் அந்தோலன் நகர்ப்புற சுகாதாரத்தின் முகத்தை மாற்றி, தூய்மை உணர்வைத் தூண்டுகிறது. பாலினம், சமூகம், நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கைத் துறைகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் சுகாதாரத்தின் வெகுஜன இயக்கத்தை ஒரு பெரிய திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
***
(रिलीज़ आईडी: 1959462)
आगंतुक पटल : 166