தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

2023, ஜூலை மாதத்தில் 18.75 லட்சம் மொத்த உறுப்பினர்களுடன் மிக அதிக அளவிலான சம்பளப் பட்டியல் அதிகரிப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பதிவுசெய்துள்ளது

Posted On: 20 SEP 2023 5:43PM by PIB Chennai

2023 ஜூலை மாதத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஈபிஎஃப்ஓ மொத்தம் 18.75 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது என்பதை இன்று வெளியிடப்பட்ட ஈபிஎஃப்ஓவின் தற்காலிக சம்பளப் பட்டியல் தரவு எடுத்துக்காட்டுகிறது. 2017, செப்டம்பர் முதல் 2018, ஏப்ரல் வரையிலான காலத்தை உள்ளடக்கிய ஈபிஎஃப்ஓ சம்பளப் பட்டியல் தரவு முதன்முதலில் வெளியிடப்பட்டதிலிருந்து இந்த மாதத்திலான உயர்வு மிக அதிகமாகும். கடந்த மூன்று மாதங்களாக அதிகரிக்கும் போக்கு தொடர்கிறது. முந்தைய (ஜூன்) மாதத்தை விட சுமார் 85,932 உறுப்பினர்கள் அதிகரித்துள்ளனர். 

2023, ஜூலை மாதத்தில் சுமார் 10.27 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தரவு சுட்டிக்காட்டுகிறது, இது 2022, ஜூலைக்குப் பிறகு மிக அதிகமாகும். ஈபிஎஃப்ஓவில் சேரும் புதிய உறுப்பினர்களில் பெரும்பாலோர் 18-25 வயதுக்குட்பட்டவர்கள், இது மொத்த புதிய உறுப்பினர்களில் சுமார் 58.45% ஆகும்.  நாட்டின் முறைசார்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் முதல் முறையாக வேலை தேடுபவர்களாக இருப்பது  இளைஞர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

சுமார் 12.72 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறிமீண்டும் ஈபிஎஃப்ஓவில் சேர்ந்துள்ளனர்.  இது கடந்த 12 மாதங்களில் மிக உயர்ந்தது. இந்த உறுப்பினர்கள் தங்கள் வேலைகளை மாற்றி, ஈ.பி.எஃப்.ஓவின் கீழ் உள்ள நிறுவனங்களில் மீண்டும் சேர்ந்தனர், மேலும் இறுதி உரிமைகோரலுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக தங்கள் திரட்டல்களை மாற்ற முடிவு செய்தனர், இதனால் அவர்களின் சமூகப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது.

ஊதியத் தரவுகளில் பாலின வாரியான பகுப்பாய்வு ஜூலை, 2023 இல் சுமார் 3.86 லட்சம்  பெண் உறுப்பினர்கள் சம்பளப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. சுமார் 2.75 லட்சம் பெண் உறுப்பினர்கள் முதல் முறையாக சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வந்துள்ளனர்.

ஊதிய தரவுகளின் மாநில வாரியான பகுப்பாய்வு மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஹரியானா ஆகிய 5 மாநிலங்களில்  உறுப்பினர் சேர்க்கை அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.  மொத்த  உறுப்பினர் சேர்க்கையில் இந்த மாநிலங்களின் பங்கு சுமார் 58.78% ஆகும்.

தொழில் வாரியான தரவுகளின் மாதாந்திர ஒப்பீடு வர்த்தக-வணிக நிறுவனங்கள், கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழில், மின், இயந்திரவியல் மற்றும் பொது பொறியியல் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது..

************

ANU/SM/SMB/KRS



(Release ID: 1959148) Visitor Counter : 98


Read this release in: Urdu , English , Hindi , Telugu