உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை திரு ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்
Posted On:
20 SEP 2023 12:40PM by PIB Chennai
சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா கண்டு ஆகியோர் வரும் 24-ந் தேதியன்று தேசு விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பைத் திறந்து வைக்கிறார்கள்.
தேசு விமான நிலையம் என்பது தேசு நகரத்தில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும், இது ஒரே ஓடுபாதை மூலம் இயங்குகிறது. இந்த விமான நிலையம் 212 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஏடிஆர் 72 வகை விமானங்களுக்கான நடவடிக்கைகளை கையாளும் திறன் கொண்டது. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க தேசு விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான மேம்பாட்டுப்பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டது. ரூ.170 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஓடுபாதை விரிவாக்கம் (1500 மீ x 30 மீ), இரண்டு புதிய ஏப்ரான்கள் கட்டுதல், ஏடிஆர் 72 வகை விமானம் வருவதற்குரிய புதிய முனையக் கட்டிடம், தீயணைப்பு நிலையம், ஏடிசி கோபுரம் ஆகியவை அடங்கும்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆர்.சி.எஸ் உடான் திட்டத்தின் கீழ் தேசு விமான நிலையம் 2018 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த விமான நிலையம் தற்போது அலையன்ஸ் ஏர் & ஃப்ளைபிக் ஏர்லைன்ஸின் வழக்கமான விமானங்கள் மூலம் திப்ருகார், இம்பால் மற்றும் குவஹாத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முனையக் கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்:
· முனையப் பகுதி: 4000 சதுர மீட்டர்.
· பீக் ஹவர் சேவை திறன்: 300 பயணிகள்
· செக்-இன் கவுண்டர்கள்: 05 + (எதிர்காலத்தில் 03)
· வருகை கன்வேயர்கள் : 02
· விமான பார்க்கிங் பகுதிகள்: 02 - ஏடிஆர் -72 வகை விமானம்.
திட்டத்தின் நன்மைகள்
· அதிக போக்குவரத்தை கையாள விமான நிலைய திறனை விரிவுபடுத்துதல்.
· வடகிழக்கு பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.
· சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்.
· பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல்.
அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தின் தலைமையகமான லோஹித் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் தேசு ஆகும். இந்த நகரம், சுற்றிலும் பசுமையான காடுகள் மற்றும் மலைகள் நிறைந்து, இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது
***
ANU/AD/PKV/AG/KV
(Release ID: 1959016)
Visitor Counter : 125